கடவுளையே கண்டித்தவர் அவ்வை தமிழாற்றுப்படையில் வைரமுத்து பேச்சு

நிதிநிலை அறிக்கைகள்
வாக்கு வங்கிகளுக்காக அல்ல
வயிற்று வங்கிகளுக்காகத் தயாரிக்கப்பட வேண்டும்
கவிஞர் வைரமுத்து பேச்சு

‘தமிழாற்றுப்படை’ என்ற தலைப்பில்ஆராய்ச்சிக் கட்டுரைகள் மூலம் தமிழ்மொழியின் மூவாயிரம் ஆண்டுஆளுமைகளை இளைய தலைமுறைக்குஅறிமுகம் செய்து வருகிறார் கவிஞர்வைரமுத்துஅந்த வரிசையில் 22ஆம்ஆளுமையாக அவ்வையார் குறித்தகட்டுரையை நேற்று சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில்அரங்கேற்றினார்மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தகைசால் பேராசிரியர் இரா.மோகன்விழாவுக்குத் தலைமை தாங்கினார்.கவிஞர் கபிலன் வைரமுத்து தொடக்கவுரை ஆற்றினார்.

விழாவில் கவிஞர் வைரமுத்துபேசியதாவது :

தமிழ் இலக்கிய நெடுங்கணக்கில்அவ்வையார் என்பவர் ஒருவரல்லர்.ஒன்றுக்கு மேற்பட்ட சிலர் அல்லது பலர்அவ்வையார் என்ற பெயரில்இயங்கியிருக்கலாம்சங்ககாலஅவ்வையார் என்றும் நீதிநூல்அவ்வையார் என்றும் அவ்வைஇலக்கியத்தை நான் இரண்டாகப்பிரிக்கிறேன்.

ஆணாதிக்கச் சமுதாயத்தில்பெண்களுக்கான ஒழுக்க விதிகளையும்ஆண்களே தீர்மானித்த காலத்தில்,ஆண்களுக்கான ஒழுக்க விதிகளையும்எழுதிய பெண்ணியப் பெரும்புலவர்என்று சங்ககால அவ்வையைக்கொண்டாடலாம்நாடோ காடோ,பள்ளமோ மேடோ ஆடவர்கள்நல்வழியில் வாழ்ந்தால்தான் அந்தநிலம் நலம் பெறும் என்று சட்டம்வகுத்தவர் சங்ககால அவ்வை.

பிற்காலச் சோழர் காலத்தைச்சார்ந்தவராகக் கருதப்படும் பிற்காலஅவ்வை அறம்பாடிச்சென்ற திறம்மிக்க பெருமாட்டி. சங்ககால அவ்வை பாடியதுகற்றவரைச் சென்றடைந்தஇலக்கியமானது. பிற்கால அவ்வையின்பாடல்களோ கல்லாதவர் வாயிலும் புழங்கிய பழமொழி போன்றது.

அவ்வையார் யாருக்கும் அஞ்சாதபெண்மணிவள்ளுவரும் இளங்கோவும்கம்பனும்கூட வரையறுக்காத ஒருகருத்தை அவ்வையார்சொல்லியிருக்கிறார். கற்பு என்றால்என்ன என்று எந்தப் புலவனும்வரையறுக்கவில்லைஅது பெண்ணின்உடலோடும் மனதோடும் சம்பந்தப்பட்டதுஎன்று மட்டுமே கருதப்பட்டது. அதுபெண்ணுக்கு மட்டுமே உரியது என்றுஓரவஞ்சனையுடன் உணர்த்தப்பட்டது.அவ்வையார் ஒருவர்தான் கற்புக்குஇலக்கணம் சொன்னார். “சொன்னசொல் மாறாத தன்மைதான் கற்பு” என்றபொருளில் “கற்பெனப்படுவது சொல்திறம்பாமை” என்று ஓங்கி அடித்தார்.ஆண் பெண் என்ற உடல்களைத் தாண்டிவாக்குத் தவறாத நேர்மைதான் கற்புஎன்று மனிதகுலத்துக்கே பொதுவானஅறமாக்கினார்அப்படிப் பார்த்தால்சொன்ன வார்த்தையைக் காப்பாற்றும்அனைவரும் கற்புடையவர்களே, தவறினால் அனைவரும் கற்பிழந்தவர்களே என்பது அவ்வையின் அளவுகோல்.

அவ்வையார் போன்றஅறிவுஜீவிகளையும் கூழுக்குஅலையவிட்டதுதான் தமிழ் உலகம்செய்த தவறுபாண்டிய மன்னனின்வீட்டுத் திருமணத்திற்கு சென்றஅவ்வையார் பந்தியில்இடம்பிடிக்கமுடியாமல் பட்டினிகிடந்திருக்கிறார். “நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள்பசியினாலே சுருக்குண்டேன் சோறுண்டிலேன்” என்று பாடியிருக்கிறார். அவ்வையார் காலத்திலிருந்து ஆண்ட்ராய்டு காலம்வரை நம்மால் பசியை ஒழிக்கமுடியவில்லைஇன்னும் இந்தியாவில்30 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல்படுக்கைக்குச் செல்கிறார்களாம்.ஊட்டச்சத்து இல்லாமல் இந்தியாவில்ஐந்தில் ஒரு குழந்தைக்குஉயரத்திற்கேற்ற எடை இல்லையாம்.ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானுக்குப்பிறகு ஆசியாவின் பட்டினிப் பட்டியலில்உள்ள மூன்றாம் நாடு இந்தியாதானாம்.பசியை ஒழிக்க வேண்டும்; இருப்பவன்இல்லாதவனுக்குக் கொடுக்கவேண்டும்என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பேஐயமிட்டு உண்”  என்று பாடினார் அவ்வையார். நமது நிதிநிலைஅறிக்கைகள் வாக்கு வங்கிகளுக்காகஇல்லாமல் வயிற்று வங்கிகளுக்காகத்தயாரிக்கப்பட வேண்டும்; அப்போதுதான் பசி ஒழியும்.

வருமானத்தை விடத் தன்மானமேபெரிது என்பார்கள் புலவர்கள்அதுதான்அவர்களுக்கு அறச்சீற்றம்தந்திருக்கிறதுஅவ்வையார் அரசையும்கண்டித்திருக்கிறார்; ஆண்டவனையும்கண்டித்திருக்கிறார்கொடியகணவனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தாள்ஒரு நல்ல மனைவிஇந்த இழிந்தவனுக்காக இவளைப்படைத்தாயே பிரம்மனே. உனக்கு நான்குதலை;  ஒரு தலை ஏற்கனவே அற்றுப்போனதுஇப்படித் தவறு செய்த உன்னைப் பார்த்தால் மிச்சமுள்ள மூன்று   தலைகளையும்  நானே  கிள்ளி   எறிந்திருப்பேன் என்று உரிமையோடும் உணர்வோடும் கடவுளையே கண்டித்தவள் அவ்வை.

இன்றைய காலத்திற்குப் பொருந்தாத அவ்வையின் கருத்துகளைப்புறந்தள்ளுவோம்பொருந்தும் கருத்துகளைப் போற்றுவோம்; அவற்றை வாழ்க்கை படுத்துவோம்அவ்வையார் பெண்ணின் பெரும்பெருமை; தமிழர்களின் தனிஉரிமை.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *