‘கிண்டில் கிட்ஸ்’ பாடத்திட்டத்தைத் தொடங்கி வைத்த ஐசரி கணேஷ்

வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும் வேல்ஸ் கல்விக் குழும நிறுவனருமான டாக்டர்.ஐசரி கே.கணேஷ் அவர்கள் கிண்டில்கிட்ஸ் (Kindle Kids International curriculum) பாடத்திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் 9 ஆம்தேதி அன்று ஈஞ்சம்பாக்கம் வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில் தொடங்கிவைத்தார்.

Hindu In-School நாளிதழ் ஆசிரியர் திருமதி கிருத்திகாரெட்டி தலைமை விருந்தினராகவும் டாக்டர் திரு.ஆண்டோனியோஸ் ரகுபான்ஸே, (தலைவர் பிரிட்டிஷ் கவுன்சில் கல்விப்பணி) அவர்களும் சிறப்பு விருந்தினராய் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
இச்சர்வதேசப் பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சீரிய பணியாற்றிய சிரிய பெருமக்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

உலகளாவிய பாலர் மற்றும்தொடக்கப் பள்ளிகளில் உள்ளசி.பி.எஸ்.இ(CBSE), ஐ.சி.எஸ்.ஈ (ICSE)ஐ.பி (IB) போன்ற பல்வேறுபாடதிட்டத்தை பயன்படுத்துவோரும் பின்பற்றும்வகையில் ஒரு முழுமையான பாடத்திட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள முதல்தரம் வாய்ந்த பாலர் பள்ளியான வேல்ஸ் சர்வதேசப் பள்ளியில், கிண்டில்கிட்ஸ் பாடத்திட்டம் வெற்றிகரமாய் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வெற்றி ஆசியாவில் உள்ள பள்ளிகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது மட்டுமன்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தலைசிறந்த கல்வியாளர்களும் கல்வி நிறுவனங்களின் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

வேல்ஸ் கல்விநிறுவனம் 25 ஆண்டுகளுக்கு மேலாக 25000த்துக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் 25 கல்வி நிறுவனங்கள்மற்றும் 5000க்கும் மேற்பட்ட ஆசிரிய பெருமக்களுடன் கல்வித் துறையில் தனது சீரியபணியை தமிழ்நாடு, தெலுங்கானா மற்றும் சிங்கப்பூரில் பாலர் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை ‘ஒரேகுடையின்கீழ்’ என்ற நிலையில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *