சந்தோஷ சாப்ளின்… சார்லி சாப்ளின் 2 விமர்சனம்

நடிகர்கள்: பிரபுதேவா (திரு), பிரபு (ராமகிருஷ்ணன்), நிக்கிகல்ராணி (சாரா), ஆதாசர்மா (Psycology Student), விவேக் பிரசன்னா (துபாய் ராஜா), ரவிமரியா (புல்லட் புஷ்பராஜ் ) அரவிந்த் ஆகாஷ், செந்தில், கிரேன் மனோகர், செந்தி, சாம்ஸ், காவ்யா, அமீத், பார்கவ், கோலிசோடா சீதா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார் ஆகியோர் நடித்துள்ளனர். கெளரவ வேடத்தில் வைபவ்.
ஒளிப்பதிவு – செளந்தர்ராஜன்
இசை – அம்ரீஷ்
பாடல்கள் – யுகபாரதி, பிரபுதேவா, ஷக்திசிதம்பரம், செல்ல தங்கையா.
எடிட்டிங் – G.சசிகுமார்
கலை – விஜய்முருகன்
நடனம் – ஜானி, ஸ்ரீதர்
ஸ்டண்ட – கனல் கண்ணன்
தயாரிப்பு நிர்வாகம் – மகேந்திரன்
தயாரிப்பு மேற்பார்வை – பரஞ்சோதி
தயாரிப்பு – T.சிவா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஷக்தி சிதம்பரம்.
கதைக்களம்…
மேட்ரிமோனி நிறுவனம் நடத்தி வருகிறார் பிரபு தேவா. ஊருக்கே திருமணம் செய்து வைத்தாலும் இவரின் திருமணம் தள்ளிக் கொண்டே போகிறது.
ஒரு வழியாக பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு டாக்டர் பிரபுவின் மகளான நிக்கி கல்ராணியை காதலித்து கரம் பிடிக்க இருக்கிறார்.
அப்போது பிரபுதேவாவின் நண்பன் ஒருவன் கொடுத்த தவறான தகவலால் நிக்கியின் நடத்தையில் சந்தேகம் கொள்கிறார்.
அதனையடுத்து ஒருநாள் போதையில் ஒரு வீடியோ ஒன்றை பதிவு செய்து அவரையும் அவர் குடும்பத்தையும் தவறாக பேசி வாட்ஸ் அப்பில் அனுப்பி விடுகிறார்.
அதன்பின்னர் தான் நிக்கி மேல் தவறு இல்லை என இவருக்கு தெரிகிறது. அதன்பின்னர் என்ன ஆனது? நிக்கியை கரம் பிடித்தாரா? கல்யாணம் நடந்ததா? என்பதே படத்தின் மீதிக்கதை.
கேரக்டர்கள்…
நடிகராக ஸ்கோர் செய்வதை விட டான்சராக அதிகம் ஸ்கோர் செய்கிறார் பிரபு தேவா. சின்ன மச்சான், ஐ வான்ட் டு மேரி யூ மாமா ஆகிய பாடல்கள் இவர் ரசிகர்களுக்கு மெகா விருந்தாக அமையும்.
நிக்கி கல்ராணி நடிப்பிலும் அழகிலும் கவர்கிறார். மற்றொரு நாயகியான அதா ஷர்மா கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார். சைக்காலஜி ஸ்டூடண்ட் இவ்வளவு மெண்டல் போலவா இருப்பார்கள்?
பிரபுதேவாவை வம்பில் மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பதில் ரசிக்க வைக்கிறார் விவேக் பிரசன்னா (துபாய் ப்ரெண்ட்)
நாயகன் மற்றும் நாயகியின் அப்பாக்களாக வரும் பிரபு மற்றும் டி. சிவா ஆகியோர் படத்திற்கு கூடுதல் பலம்.
இவர்களுடன் அரவிந்த் ஆகாஷ், அமித் பார்கவ், சமீர் கோச்சார் ஆகியோரின் கேரக்டர் நிறைவு.
வில்லன் வேடத்தில் நிறைவு இல்லை. ரவி மரியா கேரக்டர் படத்தின் நீளத்திற்கு மட்டுமே உதவுகிறது. தேவையில்லாத கேரக்டர்.
டெக்னிசிஷ்யன்கள்…
நல்ல நல்ல நடிகர்கள் கிடைத்தும் திரைக்கதையை வலுவில்லாமல் கொண்டு சென்றுள்ளார் சக்தி சிதம்பரம்.
16 வருடங்களுக்கு முன் வந்த சார்லி சாப்ளின் காமெடியை போல இதில் எதிர்பார்த்து செல்லமுடியாது. மற்றபடி சிரித்து விட்டு வர ஒரு படம்.
பாடல்களும் ஒளிப்பதிவும் படத்தை போரடிக்காமல் சூப்பராக கொண்டு செல்கின்றன.
அம்ரிஷ் இசையில் பாடல்கள் அருமை. சின்ன மச்சான், ஐ வாண்டு மேரி யூ மாமா பாடல்கள் ரசிகர்களின் காலர் ட்யூனாக ஆல்ரெடி மாறியிருக்கிறது.
காமெடி படத்தில் லாஜிக் பார்க்க கூடாது என்றால் இந்த படத்தை பார்க்கலாம்.
குடும்பத்துடன் பார்க்க கலகலப்பாக ஒரு படத்தை கொடுத்திருக்கிறார் டைரக்டர் சக்தி சிதம்பரம்.
சார்லி சாப்ளின் 2… சந்தோஷ சம்மந்திகள்…