சர்வமும் தாலாட்டு… சர்வம் தாளமயம் விமர்சனம்

சர்வமும் தாலாட்டு… சர்வம் தாளமயம்
விமர்சனம்

சர்வம் தாளமயம் ஜிவி பிரகாஷ், சர்வம் தாளமயம் ராஜீவ் மேனன் சர்வம் தாளமயம் திரை விமர்சனம், சர்வம் தாளமயம் விமர்சனம், சர்வம் தாளமயம் ஏஆர் ரஹ்மான்,

நடிகர்கள்:  ஜிவி பிரகாஷ், அபர்ணாபாலமுரளி, நெடுமுடி வேணு, வினீத், , குமரவேல், திவ்யதர்ஷினி (டிடி) மற்றும்பலர்.
ஒளிப்பதிவு           –        ரவி யாதவ்
இசை           –        ஏஆர் ரஹ்மான்,
எடிட்டிங் – ஆண்டனி

இயக்கம் – ராஜீவ் மேனன்
தயாரிப்பு – மைண்ட் ஸ்கீரீன் பிலிம்ஸ்இன்ஸ்டியூட்

கதைக்களம்…

மிருதங்க வாசிப்பில் கலைமாமணி விருது பெற்றவர் நெடுமுடி வேணு. இவரிடம் தாளம் கற்க பெருங்கூட்டமே காத்திருக்கிறது.

ஆனால் வசதி மற்றும் தகுதி பார்த்தே இவர் கற்றுக் கொடுப்பார். ஆனாலும் திறமையானவர்களை மதிப்பது இவரது நற்குணங்களில் ஒன்று.

இந்நிலையில் இவருக்கு மிருதங்களை செய்துக் கொடுக்கும் குமரவேலின் மகன் ஜிவி. பிரகாஷ் (கிறிஸ்டியன்) இவரிடம் தாளம் பயில ஆசைப்படுகிறார்.

தனக்கு தெரிந்த பையன் என்பதால்நெடுமுடி வேணு அவர்களும் சம்மதிக்கிறார்.

கீழ் ஜாதியை சேர்ந்த ஜிவி. பிரகாஷ் தன் குருவிடம் தாளம் கற்பதை பொறுக்க முடியாமல் அவரிடம் இருந்து விலகுகிறார் வினீத். இவரின் தங்கை தான் விஜய் டிவி புகழ் டிடி.

அண்ணனும் தங்கையும் இணைந்து குருவின் புகழை அழிக்க நினைக்கிறார்கள்.

இதன்பின்னர் தன் நண்பனுக்காக பொய் ஒன்றை பேசி, ஜி.வி. பிரகாஷ்க்கும் குருவுக்கும் பிரச்சினை ஏற்படுகிறது. எனவே இவரையும் வெளியே அனுப்புகிறார் குரு.

வெளியே சென்ற இவர்கள் என்ன செய்தார்கள்? ஜிவி பிரகாஷ் சாதித்து காட்டினாரா? தன் குருவை மிஞ்சினாரா வினீத்.? அதன்பின்னர் நடப்பதுவே படத்தின் மீதிக்கதை.

நடிகர் நடிகை எப்படி..?

ஜிவி. பிரகாஷின் நடிப்பில் இது முக்கியமான படமாக இருக்கும். நாச்சியார் படத்திற்கு பிறகு இதிலும் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார்.

தாளத்தை கற்க வேண்டும் என்ற வெறியுடன் ஜிவி அலைந்து திரியும் போது இவரை நடிகராக பார்க்க முடியவில்லை. இவருக்குள் ஒளிந்திருக்கும் அந்த இசையமைப்பாளரே நமக்கு தெரிகிறார்.

ஆனால் சில காட்சிகளில் நெடுமுடிவேணுவுடன் போட்டி போட முடியாமல் ஜிவி. தோற்று போவதையும் நம்மால் காண முடிகிறது.

கலைமாமணி வேம்பு ஐயராக வாழ்ந்திருக்கிறார் நெடுமுடி வேணு. நான்தான் நம்பர் 1 என அவர் சொல்லும்போது அவரின் கேரக்டர் திமிர் தெரிகிறது.

படத்தில் காமெடி நடிகர் இல்லை என்பதால் அந்த வேலையையும் அழகாக ரசிக்கும் படி செய்திருக்கிறார்.

அபர்ணா பாலமுரளி தான் பட நாயகி. நடிப்பிலும் முகத்திலும் நல்ல முதிர்ச்சி தெரிகிறது.

ஆனால் ஜிவி.யுடன் இவருக்கான கெமிஸ்ட்ரி ஒட்டவில்லை என்றே சொல்ல வேண்டும்.

இந்த படத்திலும் டிவி தொகுப்பாளராக வருகிறார் டிடி (திவ்யதர்ஷினி). தனக்கான பாத்திரத்தை சரியாகவே செய்துள்ளார். ரியால்ட்டி ஷோக்களில் நடக்கும் பித்தலாட்டங்களை போட்டு உடைத்துவிட்டார் டிடி.

மிருதங்கம் செய்யும் தொழிலாளியாககுமரவேல் குட் வேல். வில்லனாக வினீத் வருகிறார். ஆனால் இறுதியில் வில்லனும் திருந்தி விடுகிறார்.

ஜிவி. பிரகாஷின் நண்பராக வருபவரும் நல்ல தேர்வு. ஹீரோ போல இருக்கிறார்.

டெக்னீஷியன்கள் எப்படி..?

ரவி யாதவ்வின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அருமை. ஜிவி. பிரகாஷ் ஊர் ஊராக சுற்றும்போது இவரின் கேமராவும் நம்மை சுற்றுலா அழைத்துச் செல்கிறது.

சர்வம் தாளமயம் என்ற டைட்டில் இருக்கும்போது அதில் சர்வமும் நானாக இருக்க வேண்டும் என விரும்பி அதை திறம்பட செய்துள்ளார் ஏஆர். ரஹ்மான்.

கர்நாடக இசையில் நம்மை கரைய வைத்துள்ளார். சர்வம் தாளமயம் மற்றும் வரலாமா பாடல்கள் பெரும் வரவேற்பை பெறுகின்றன.

முதல் பாதி வரை ஒரு நிமிடம் கூட போராடிக்காமல் கதையை கொண்டு செல்கிறார் டைரக்டர் ராஜீவ் மேனன்.

2ஆம் பாதிதான் இறுதியில் கொஞ்சம் போரடிக்கிறது. க்ளைமாக்ஸ் எதிர்பார்த்த வழக்கமான ஒன்று என்பதால் படம் முடியும் முன்பே எழுந்திருக்க தோன்றுகிறது.

பாடல்களை தாளம் போட்டு ரசிக்கும் அனைவரும் இப்படத்தை பார்க்கலாம்.

சர்வம் தாளமயம்… சர்வமும் தாலாட்டு

 

Leave a Reply

Your email address will not be published.

three + 9 =