டெட்டால் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் சுத்தத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி குழந்தைகள்

டெட்டால் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் சுத்தத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி குழந்தைகள்

மார்ச் 1ஆம் தேதி தூய்மை இந்தியா திட்டம் காலெக்டிவ் குட் பவுண்டேஷன் மற்றும் அவ்வை கிராம நல சங்கம், தமிழ்நாடு அரசுடன் இணைந்து தூய்மை இந்தியா விழிப்புணர்வு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாண்புமிகு ப.ம.பாண்டியராஜன் (தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர்) இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியில் ஒரு பள்ளிகளுக்கு சிறந்த தூய்மை திட்ட நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் சிறந்த ஆசிரியர்களுக்கும் வட்டார வள ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.

டெட்டால் தூய்மை இந்தியா திட்டம் கடந்த 4 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பள்ளி குழந்தைகளுக்கான ஆரோக்கியம் மற்றும் சுகாதாரம் பற்றிய கல்வி அறிவை புகட்டுவதற்காக பிரத்தியேக பாடத்திட்டங்களையும், பயிற்சி உபகரணங்களையும் பயன்படுத்தி வருகின்றது. இத்திட்டம் இதுவரை சுமார் 3 லட்சம் பள்ளிகளையும் 90 லட்சம் குழந்தைகளையும் சென்றடைந்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பள்ளிக் குழந்தைகள் தங்களது சுய ஆரோக்கியத்தையும் சுற்றுப்புற ஆரோக்கியத்தையும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத சமூகம் பற்றியும் தெரிந்து கொள்ள உதவுகின்றது.

தினமும் கைகளை சோப்பு மூலம் சுத்தம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பயிற்சி வழிமுறைகளை தெரிந்து கொள்ள திட்டம் பெரும் உதவியாக உள்ளது.

இத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. ரவி பட்நகர் நிறுவனத்தின் வெளியுறவு இயக்குனர் கூறுகையில் “சுகாதாரம் பற்றிய பழக்க வழக்கங்கள் மாற்றம் இத்திட்டத்தின் வெற்றிக்கான முதுகெலும்பு”. இதனால் இத்திட்டம் பல்வேறு பயிற்சி வழிகளை கையாண்டு நிரந்தர மாற்றத்தை குழந்தைகளிடமும் மற்றும் சமூகத்தினரிடமும் கொண்டு செல்ல உதவும்.

டெட்டால் தூய்மை இந்தியா திட்டம் வரும் நிதியாண்டில் தமிழகத்தில் மட்டும் (மாவட்டங்கள் திருவள்ளூர் மற்றும் பெரம்பலூர்) மாவட்டத்தில் செயல்படுத்தப்படும். மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் மற்றும் ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 2000 ஆசிரியர்கள் பயன் பெறுவார்கள். மேலும் வழிக்கல்வி மூலம் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *