தங்கமான தமிழ் படம்…; தடம் விமர்சனம் 3.75/5

நடிகர்கள்:  அருண்விஜய், தான்யா ஹோப், வித்யா பிரதீப், ஸ்மிருதி வெங்கட், சோனியா அகர்வால், யோகிபாபு, பெப்சி விஜயன், மீரா கிருஷ்ணன் மற்றும் பலர்.

இயக்கம் – மகிழ்திருமேனி
ஒளிப்பதிவு – கோபிநாத்
எடிட்டிங் – ஸ்ரீநாத்
இசை – அருண் ராஜ்
தயாரிப்பு – ரெதான் சினிமாஸ் சார்பில் இந்தர் குமார்

கதைக்களம்…

எழில் மற்றும் கவின் என அருண்விஜய் இரட்டை வேடமேற்று நடித்துள்ளார்.

அருண்விஜய் மற்றும் இயக்குனர் மகிழ் திருமேனியின் தடையறத்தாக்க வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

கவின் மற்றும் எழில் என இரட்டை வேடமேற்று நடித்துள்ளார் அருண்விஜய்.

சிவில் இன்ஜினியர் எழில். தானுண்டு தன் வேலையுண்டு தன் காதலி உண்டு என வாழ்பவர் எழில். இவரின் காதலி தன்யா.

கவின் காதலி ஸ்மிருதி. இவர் ஏடிஎம் மெசின் முதல் அனைத்தையும்  கொள்ளையடித்து செமயாய் என்ஜாய் செய்ய வேண்டும் என நினைப்பவர். இவருக்கு திருட்டு தொண்டு செய்யும் இருவர் தான் யோகி பாபு மற்றும் மீரா கிருஷ்ணன்.

ஒரு நாள் நள்ளிரவு ஆகாஷ் என்றவாலிபர் கொல்லப்படுகிறான்.

அந்த இளைஞனை கொன்றது அருண் விஜய்தான் என காவல்துறை கன்பார்ம் செய்தாலும் இரட்டையர் இருப்பதால்கொலையாளி யார்?  என தெரியாமல் கன்ப்யூஸ் ஆகிறது.

குற்றவாளியை நிரூபிக்க முடியாமல் போலீஸ் மற்றும் நீதிமன்றம் தினறுகிறது. இறுதியில் எப்படி நிரூபித்தார்கள் என்பதே கதை.

நடித்தவர்கள் எப்படி..?

இரட்டை வேடம் என்றால் அங்குள்ளவர் இங்கும் இங்குள்ளவர் அங்கும் என பல சினிமாக்களில் பார்த்திருப்போம்.

ஆனால் அவை போல் இல்லாமல் சிறப்பான திரைக்கதை அமைத்துள்ளார் மகிழ் திருமேனி. அதை உணர்ந்து தேவையான நடிப்பை கொடுத்துத்திருக்கிறார் அருண்விஜய்.

ஐடி கம்பெனியில் நாயகி பின்னால் சுற்றுவது முதல் காபி சாப்பிடும் வரை ரொமான்ஸில் கலக்கியிருக்கிறார் நாயகன்.

தான்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் என 2 நாயகிகளும் கொஞ்சம் நேரம் என்றாலும் நம்மை ஈர்க்க தவறவில்லை.

ஒரு கப் காபி குடிக்க டைரக்டர் நடத்தியுள்ள அந்த சீன்கள் காதலர்களை கவரும். ஆனால் முடிவுதான் சுவாரஸ்யம் இல்லை.

கதையின் நாயகியாகவும் காவல்துறை நாயகியாகவும் நம்மை அதிகமாகவே ஈர்த்துவிடுகிறார் வித்யா பிரதிப்.

யோகி பாபு இருந்தும் காமெடிக்கு அதிகம் வேலையில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு சோனியா அகர்வால் மற்றும் பெப்சி விஜயன் இருவரும் கச்சிதம்.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

போலீஸ் ஸ்டேசனில் ரெண்டு அருண்விஜய்யும் மோதும் காட்சிகள் ஆக்சன் பிரியர்களுக்கு அல்வா.

அறிமுக இசையமைப்பாளர் அருண்ராஜ் இசையில் விதி நதியே பாடலும் இணையே பாடலும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் நம்மை மிரட்டியுள்ளார்.

ஒளிப்பதிவும் படத்தொகுப்பும் நம்மை படத்துடன் ஒன்ற வைத்துவிடுகிறது.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதுதான் இந்திய சட்டம். இந்த சட்டப்படி காவல்துறைக்கும் நீதித்துறைக்கும் போதுமான ஆதாரம் இல்லாமல் எப்படி நிரூபிப்பது? என திரைக்கதை சுவாரஸ்யத்துடன் அமைத்துள்ளார் மகிழ்திருமேனி.

இவர் குற்றவாளியா? அவர் குற்றவாளியா? என ட்விஸ்ட் மேல் டவிஸ்ட் கொடுத்து நம்மை சீட் நுனியில் உட்காரவைத்துவிட்டார் டைரக்டர்

இதுபோன்ற வழக்குகள் மலேசியா, ஜெர்மனியில் நடந்துள்ளதையும் டைரக்டர் சுட்டிகாட்டியுள்ளது சிறப்பு.

தடம்.. தங்கமான தமிழ் படம்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *