தொல் திருமாவளவன் பாராட்டைப் பெற்ற ‘கண்ணே கலைமானே’ திரைப்படம்

‘கண்ணே கலைமானே’ திரைப்படம் பார்த்து மகிழ்ந்தேன் நெகிழ்ந்தேன் கவித்துவமான இல்லறம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பாராட்டு

உதயநிதி ஸ்டாலின் தமன்னா நடித்த ரெட் ஜெயின் தயாரிப்பில் வெளியாக தயாராக உள்ள ‘கண்ணே கலைமானே’ திரைப்படத்தின் சிறப்பு காட்சி நேற்று மாலை அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கும் காட்சிப்படுத்தப்பட்டது. படத்தை பார்த்த பலரும் மிக சிறப்பான திரைப்படம் என்ற கருத்தை சொன்னார்கள். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ‘கண்ணே கலைமானே’ மிகச்சிறந்த யதார்த்தமான திரைப்படம் என்றும் உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் வடிவுக்கரசி என நடித்திருக்கும் அனைத்து நடிகர்களையும் யதார்த்தம் மீறாமல் இயக்குனர் சீனுராமசாமி நடிக்க வைத்திருக்கிறார் என பாராட்டினார். மேலும், திரைப்படத்திற்கு எழுதி எழுதி இருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் அர்த்தமுள்ளதாகவும், ஆழமானதாகவும் உள்ளது. யுவன் சங்கர் ராஜாவின் இசை திரைப்படத்தை சூழலுக்கு இட்டுச் செல்கின்றது. மொத்தத்தில் கவித்துவமான குடும்பத் திரைப்படம் என பாராட்டி திரைப்பட குழுவிற்கு தன் வாழ்த்துக்களைக் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published.

11 + five =