முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 33-வது ஆண்டு விழா மற்றும் வேல்ஸ் மஹா உத்சவ் விழா

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 33-வது ஆண்டு விழா மற்றும் வேல்ஸ் மஹா உத்சவ் விழா கொண்டாடப்பட்டது

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் 33-வது ஆண்டு விழா மோஜோ 2019 மற்றும் வேல்ஸ் மஹா உத்சவ் விழா பிப்ரவரி 09.02.2019 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கூடுதல் கண்காணிப்பாளர் திரு என்.திலீபன் IRS மற்றும் கர்நாடக இசை மற்றும் பின்னணி பாடகர் திரு.உன்னி கிருஷ்ணன் அவர்களும் கலந்துகொண்டு விழாவினை துவக்கிவைத்தனர்.

விழாவில் துவக்க நிகழ்ச்சியாக 1001 மாணவர்களின் ஓவியங்கள் இடம்பெற்ற பிரம்மாண்ட ஓவிய கண்காட்சி நடைபெற்றது.

கலைப் பிரிவைச் சார்ந்த இளம் மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் குறும்படம் காட்சியிடப்பட்டது.

மாணவர்களின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

வேல்ஸ் நாட்டியாலயா மாணவர்களின் கண்கவர் அரங்கேற்றம் அனைவரையும் தன் வசப்படுத்தியது.

உடலுக்கு வலுவூட்டும் யோகப் பயிற்சிகளை அரங்கேற்றிய மாணவர்கள் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர்.

தொடர்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் அரங்க அமைப்பு சிறப்பாக அமைந்திருந்தன.

 

U

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *