முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சி

முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் அறிவியல் தொழில்நுட்பக் கண்காட்சி

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு முகப்பேர் வேலம்மாள் பள்ளியில் நடுநிலை பிரிவு ஐஐடி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த அறிவியல் தொழில்நுட்பம் கண்காட்சி 2019 மார்ச் 2ஆம் தேதி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. முற்றிலும் மாணவர்களின் முயற்சியால் உருவாக்கப்பட்டிருந்த அறிவியல், பொறியியல், கணிதவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த மாதிரி கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மாணவர்களின் படைப்பாற்றலை புதுமை ஆக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவும் தற்காலிக நவீன சமுதாயத்தின் தேவைகளை நிறைவு செய்வதாகவும் நாகரிக வாழ்க்கையின் குறைகளை களைந்து தற்சார்பு வாழ்க்கையை வளர்த்து கொள்ளும் அளவில் மாணவர்களின் படைப்புகள் அமைந்திருந்தனர். மண் மற்றும் சூரிய ஒளி தவிர்த்து தேங்காய் நார் கொண்டு மிக குறைந்த அளவு தண்ணீரில் வளர்க்கப்படும் (ஹைட்ராலிக்) ‘நீரியல் குழாய்’ செடிகளின் கண்காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பதாகவும் புதியதொரு முயற்சியின் வெளிப்பாடாகவும் அமைந்திருந்தது.

 

Leave a Reply

Your email address will not be published.

14 + eleven =