முத்துராஜ் கமல்-ஷங்கர் இணையும்  ’இந்தியன் 2’.; செட் பணிகளை துவங்கினார் 

கமல் – ஷங்கர் இணைந்து பணியாற்றிய முதல் படம் இந்தியன். இப்படம் வெளியாகி 22 வருடங்கள் உருண்டோடி விட்டன.
இதனையடுத்து ரோபோ படத்தில் இணைந்து சில நாட்கள் சூட்டிங்கும் நடத்தப்பட்டது.
ஆனால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
தற்போது லைகா தயாரிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் மூலம் இருவரும் மீண்டும் இணைகின்றனர்.
கமல் பிறந்த நாளில் இதன் அறிவிப்பை லைகா வெளியிட்டது.
டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், செட் அமைக்கும் பணிகள் இன்று (நவம்பர் 12) தொடங்கப்பட்டுள்ளது.
இத்தகவலை கலை இயக்குநராக பணிபுரியும் முத்துராஜ் தெரிவித்து இருக்கிறார்.
ஒளிப்பதிவாளராக ரவிவர்மா பணிபுரிகிறார்.
எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’வுக்கான வசனங்களை எழுதியுள்ளனர்.
கமலுடன் துல்கர் சல்மான், காஜல் அகர்வால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *