ஹஜ் அமைப்பின் சார்பில் முதல்வருக்கு நன்றி – அபூபக்கர்

முதல்வருக்கு நன்றி….

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனித பயணமாக இருப்பது ஹஜ் யாத்திரை. இந்தப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இஸ்லாமியர்கள் மத்தியில் மிகப்பெரிய குறிக்கோளாக இருந்து வருகிறது. இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து தருமாறு மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மாண்புமிகு திரு. எடப்பாடி. கே பழனிச்சாமி அவர்கள் கடிதம் எழுதியிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள 3534 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்து இருப்பதன் காரணமாக தமிழகத்தில் இருந்து கூடுதலாக 1,500 பேருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சகத்தின் மூலம் அனுமதியை பெற்று தருமாறு முதலமைச்சர் கடிதம் எழுதி இருப்பது வரவேற்கத்தக்கது. இந்த நேரத்தில் அகில இந்திய ஹஜ் அசோசியேசன் சார்பில் எனது மனமார்ந்த நன்றிகளை முதலமைச்சருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு,
பிரசிடெண்ட் அபூபக்கர் அகில இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *