18 சட்டப்பேரவைத் தொகுதிகளின் நிலவரம் குறித்து அரோரா தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் விளக்கம் கேட்டறிந்தார்
தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளின் நிலவரம் குறித்து புதிய
தேர்தல் ஆணையர் அரோரா தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் விளக்கம் கேட்டறிந்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் தகவல் அளித்த தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்ய சாகு, தமிழக சட்டப்பேரவைச் செயலரிடம் விளக்கம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டதாகவும், 18 சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர்களின் பதவி நீக்கம் குறித்து இதுவரை யாரும் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை என்ற நிலையில் வரும் ஜனவரி 25 ம் தேதிவரை கால அவகாசம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
இதற்கிடையே பிப்ரவரி 7 ம் தேதிக்குள் 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்திருந்ததும் குறிப்பிடத் தக்கதாகும்.