2.0 டிரைலர் வெளியீடு: தொடர்ந்து ரஜினி ரசிகர்களை ஏமாற்றும் லைகா

இந்திய சினிமாவிலேயே ரூ. 550 கோடியில் அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள படம் 2.0

லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரஜினிகாந்த், அக்சய்குமார், எமிஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஷங்கர் 3டியில் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை மிகப்பிரம்மாண்ட முறையில் மும்பையில் வெளியிட்டனர்.

அதனையடுத்து பாடல்களை துபாய் நாட்டில் வெளியிட்டனர்.

இதன்பின்னர் 2.0 பட டீசர் வெளியீட்டு விழாவை ஐதராபாத்திலும் டிரைலர் வெளியீட்டு விழாவை சென்னையிலும் நடத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால் டீசரை யுடிப்பில் வெளியிட்டனர். தற்போது நவம்பர் 3ல் டிரைலரை வெளியிட உள்ளதாக தெரிகிறது.

அதற்கும் இங்கே விழா நடப்பதாக தெரியவில்லை. அதையும் யூடிப்பில் வெளியிடுவார்கள் என்றே கூறப்படுகிறது.

ரஜினிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்தாலும் அவரது பலமே தமிழ்நாடு தான். அப்படியிருக்கையில் இந்த படம் தொடர்பாக ஒரு விழா கூட இங்கே நடத்தப்படவில்லை.

இதனால் ரஜினி ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published.

eighteen − sixteen =