சூப்பர் ஸ்டாரின் 2.0 உலக சாதனை; 4 நாளில் ரூ. 400 கோடி வேட்டை

கடந்த நவம்பர் 29ஆம் தேதி ஷங்கர் இயக்கிய 2.0 படம் உலகமெங்கும் 15,000 தியேட்டர்களில் வெளியானது.

ரஜினிகாந்த், அக்சய்குமார் நடித்த இப்படத்தை லைகா நிறுவனம் 550 கோடி செலவில் தயாரித்து இருந்தது.

இப்படம் வெளியாகும் முன்பு பட புரமோசன் சரியில்லை. போதுமான வரவேற்பு கிடைக்காது என பலரும் கூறி வந்தனர்.

இதனால் ரஜினி ரசிகர்களே வருத்தத்தில் இருந்தனர்.

ஆனால் இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் இப்படத்தை புரோமோட் செய்வார்கள் என ரஜினிகாந்த் பொதுமேடையில் பேசும்போது கூறினார்.

அவர் சொன்னப்படியே படத்தை அனைவரும் 2.0 படத்தை பாராட்டி வருவதால் அதுவே தற்போது விளம்பரமாகி வசூல் வேட்டை செய்து வருகிறது.

இந்நிலையில் நான்கு நாட்களில் ரூ.400 கோடி வரை வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான லைகா தன் டுவிட்டர் பக்கத்தில்அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

nineteen − 3 =