வசூலில் சர்காரிடம் தோற்றது 2.0 படம்; முக்கியமான 3 காரணங்கள் இதோ…

இந்திய சினிமாவே பெருமைப்படும் முக்கிய கலைஞர்கள் ஒன்றிணைந்த படம் 2.0

டைரக்டர் ஷங்கர், நடிகர்கள் ரஜினிகாந்த், அக்சய்குமார், இசையமைப்பாளர் ஏஆர். ரஹ்மான், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி ஆகியோர் இப்படத்தில் இணைந்து பணியாற்றினர்.

நேற்று முன் தினம் நவம்பர் 29ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது.

படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்த போதும் தமிழகத்தில் மட்டும் சில இடங்களில் வசூலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இத்தனை பிரபலங்கள் இணைந்தும் இப்படம் தமிழகத்தில் சர்கார் படம் படைத்த சாதனைகளை முந்த முடியாமல் போனதுதான் வருத்தம். (சர்கார் தீபாவளி தினத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.)

 இதுகுறித்த கிடைத்த தகவல்கள் இதோ…

முதல் காரணம்… “நவம்பர் 29-ம் வியாழக்கிழமை வேலை நாள். ரஜினி படம் என்பதால் மக்கள் வரவேற்றனர்.

சில தியேட்டர்களில் 2டி படமாகவே வெளியிட்டுள்ளனர். இதனால் மக்கள் 2டியில் பார்ப்பதை தவிர்த்து விட்டு 3டியில் பார்க்க காத்திருக்கின்றனர்.

2வது காரணம்… இதற்கு முன் வெளியான ரஜினியின் கபாலி மற்றும் காலா போதிய வரவேற்பை பெறவில்லை. இதனால் எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைந்துவிட்டது.

மேலும் படத்திற்கான விளம்பரங்கள் புரோமோசன் போதவில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் படம் பார்த்த பிறகு மக்களே படத்தை புரோமோட் செய்வார்கள் என ரஜினி கூறியிருந்தார் என்பதும் இங்கே நினைவில் கொள்வது நல்லது.

3வது முக்கிய காரணம்… கஜா புயலால் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. எனவே அந்த பகுதிகளில் தியேட்டர் வசூல் மிகவும் பாதித்துள்ளது.

தமிழகத்தில் முதல்நாளில் 20 கோடி வரை 2.0 படம் வசூலித்துள்ளதாம். ஆனால் சர்கார் படம் 24 கோடியை எட்டியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சென்னையில் மட்டும் முதல்நாளில் சர்கார் வசூலை முறியடித்துள்ளது 2.0 என்பதை நம் தளத்தில் பார்த்தோம்.

சென்னையில் ‘சர்கார்’ வசூல் செய்த 2.3 கோடியே இதற்கு முன் சாதனையாக இருந்தது. அதனை 2.64 கோடி வசூல் செய்து 2.0 படம் முறியடித்துள்ளது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *