கஜா பாதிப்புக்கு 1 கோடியே 1 லட்சம் கொடுத்த லைகா நிறுவனம்

கஜா புயல் தமிழகத்தின் 7 மாவட்டங்களை கடுமையாக 5 நாட்களுக்கு முன்பு தாக்கியது.

ஆனாலும் மக்கள் இன்னும் முழுமையான இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவில்லை. குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். ஆனால் மழை காரணமாக அவர் 2 மணி நேரம் மட்டுமே பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்துள்ளார்.

இந்நிலையில் ரஜினி நடித்துள்ள விரைவில் வெளியாகவுள்ள 2.0 படத்தின் நிறுவனமான லைகா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 1கோடியே 1 லட்சம் ரூபாயை அளித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

18 + 17 =