பேரன்பே பெருமிதம்… பேரன்பு விமர்சனம்

பேரன்பே பெருமிதம்… பேரன்பு விமர்சனம்

பேரன்பு ராம் தங்க மீன்கள், பேரன்பு திரை விமர்சனம், பேரன்பு விமர்சனம்,சாதனா, பேரன்பு மம்முட்டி அஞ்சலி

நடிகர்கள்:  மம்முட்டி, தங்க மீன்கள்சாதனா, அஞ்சலி, அஞ்சலி அமீர்(திருநங்கை), சமுத்திரக்கனி, லிவிங்ஸ்டன், வடிவுக்கரசி, தயாரிப்பாளர்கள் ஜேஎஸ்கே, பி.எல். தேனப்பன் மற்றும் பலர்.
ஒளிப்பதிவு           –        தேனி ஈஸ்வர்
இசை           –        யுவன் சங்கர் ராஜா,
பாடல்கள்    –          மதன்கார்க்கி, அருண்ராஜா காமராஜ்
எடிட்டிங் – சூர்ய பிரதமன்

இயக்கம் – ராம்
தயாரிப்பு – பி.எல். தேனப்பன்

கதைக்களம்…

மம்முட்டியின் மகள் சாதனா வயது 15. அவருக்கு வாத நோய். மகளுக்கு நோய் இருப்பதால் அம்மா வேறோரு நபருடன் ஓடி விடுகிறார்.

வாத நோய் இருப்பதால் வீட்டிலும் இவளை நிரகாரிக்கிறார்கள். எனவே தன் மகளை அழைத்துக் கொண்டு தனிமையில் வசிக்கிறார் மம்முட்டி.

அதன்பின்னர் அவர்கள் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு விஷயங்களையும் அத்தியாயங்களாக (மொத்தம் 12) விவரித்து காவியம் படைத்திருக்கிறார் டைரக்டர் ராம்.

நடிகர் நடிகையர் எப்படி..?

நல்ல ஆரோக்கியமாக பெற்ற பிள்ளையை வளர்க்கவே பெற்றோர்கள் படாத பாடுப்படுகிறார்கள். மாற்றுத்திறனாளி குழந்தை என்றால் அதுவும் வயதுக்கு வந்த சிறுமி என்றால் ஒரு தந்தை எப்படியெல்லாம் கஷ்டப்படுவார் என்பதை வலியுடன் உணர்த்தியிருக்கிறார் மம்முட்டி.

எந்தவொரு நாயகனும் தேர்ந்தெடுக்க பயப்படும் கதையை தன்னால் முடியும் என வாழ்ந்துக் காட்டியிருக்கிறார் இந்த மெகா ஸ்டார்.

தன் மகள் செக்ஸ் ஆசையை புரிந்து அவளுக்கு ஒரு ஆண் மகனை தேடுவதும் அதற்கு அவர் கொடுக்கும் விளக்கமும் சபாஷ் ரகம். தன் மகளுக்கு உடை மாற்றும் காட்சியில் தன் கண்களையும் நடிக்க வைத்துள்ளார் மனிதர்.

கதையின் உயிர் நாடியே சிறுமி சாதனா தான். மாற்றுத்திறனாளியாக மாறி நம் மனதை கரைய வைத்துள்ளார். உடை மாற்றுவது, சாப்பிடுவது, பாத்ரூம் செல்வது, டிவி பார்ப்பது, ஆண்களை சைட் அடிப்பது என ஒவ்வொரு உணர்வையும் உள்வாங்கி பாப்பா பாத்திரத்தில் பளிச்சிடுகிறார்.

சில காட்சிகளில் வந்தாலும் நம் மனதில் நிறைகிறார் அஞ்சலி. ஆனால் அவர் இப்படி செய்துவிட்டாரே என்ற நம் மனம் அவரை திட்டவும் செய்கிறது.

திருநங்கையாக நடித்திருக்கும் அஞ்சலி அமீரும் நம்மை அதிகம் கவர்கிறார். பிறப்பால் மட்டுமே பாலியல் தொழில் செய்வதாகவும், தங்களுக்கு அதில் துளியும் விருப்பம் இல்லை எனவும் உணர செய்துள்ளார்.

க்ளைமாக்ஸில் இவரது கேரக்டர் நிச்சயம் பேசப்படும்.

இவர்களுடன் சமுத்திரக்கனி,வடிவுக்கரசு, லிவிஸ்டன் ஆகியோர் தங்கள் கேரக்டர்களில் கச்சிதம்.

டெக்னீஷ்யன்கள்..…

செத்து போச்சு மனசு என்ற பாடலில் நம் மனங்களை ஈர்க்கிறார் யுவன் சங்கர் ராஜா. தூரமாய்… மற்றும் அன்பின் அன்பே… பாடல்களும் நம் மனதிற்கு இதமளிக்கிறது.

ஒவ்வொரு காட்சிகளை நமக்கு தேன் போல ருசிக்க ருசிக்க கண்களுக்கு தந்துள்ளார் தேனி ஈஸ்வர்.

கொடைக்கானல் காட்சிகளில் பனி விலக காத்திருந்து அவர் படம் பிடித்திருப்பது அவரின் தொழில் பக்தியை காட்டுகிறது.

இயற்கையை ஒவ்வொரு அத்தியாயங்களாக காட்டியிருக்கிறார் இயக்குனர். அதில் இயற்கை எப்படியெல்லாம் நம்மில் மாறுபடுகிறது என்பதை காட்சியுடன் விளக்கியுள்ளது அருமை.

இறுதியில் இயற்கை பேரன்பானது என படத்தை முடித்திருப்பது மிகச் சிறப்பு.

எந்த குறைபாடும் இல்லாமல்ஆரோக்கியமாக பிறந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம் எல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்பதையும் மாற்றுத் திறனாளிகளுக்கு எப்போதும் உதவி செய்வோம் என ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார் டைரக்டர் ராம்.

நம் பிள்ளைகளுக்கு செக்ஸ் என்பது முன்பே தெரிய வேண்டும். அதை பெற்றோர்கள் சொல்லிக் கொடுக்க முடியாது. அதற்கு கல்வி அவசியம்என்பதையும் காட்சிகளில் விளக்கியிருக்கிறார் ராம்.

பேரன்பு… பேரன்பே பெருமிதம்

 

Leave a Reply

Your email address will not be published.

four × four =