“96” படத்தை பாராட்டித் தள்ளும் ஆட்டோகிராப் சேரன்

விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான படம் 96.

நிஜ காதலர்களைப் போல் ராம் மற்றும் ஜானு கேரக்டரில் நாயகன் நாயகி வாழ்ந்திருந்தனர்.

கடந்த அக்டோபர் 4ஆம் தேதி இப்படம் வெளியானது முதல் இப்படத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது இயக்குநரும், நடிகருமான சேரனும் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது…

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் 96, ஆட்டோகிராப்பையும், 96யும் சம்பந்தப்படுத்த வேண்டாம். அது கடந்து வந்த காதல்களின் நினைவுகள். இது காதலை தொலைத்த இருவரும் வாழ்க்கையை கடந்த நிலையில் சந்திக்கும்போது பரிமாறிக்கொள்ளும் உணர்வுகள்.

விஜய் சேதுபதியும், திரிஷாவும் மெல்லிய உணர்வுகளை அழகாக பதிவுசெய்து இவ்வருடத்தின் முக்கிய விருதுகளுக்கு தகுதியுடையவர்களாகிறார்கள்.

இருவரை மட்டுமே வைத்து காட்சிகளை அழகாக கோர்த்த இயக்குனர் மிகச்சிறந்த இயக்குனராக மிளிர்வார். இதுபோல சினிமாக்களால் தமிழ்சினிமா தலை நிமிரும்.” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

two × two =