எம்ஜிஆர் படத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட்

முன்னாள் முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடிகராக இருந்த போது நடித்த படம் உலகம் சுற்றும் வாலிபன்.

இப்படம் வெளியான போது உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இரண்டாம் பாகம் கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற பெயரில் வெளியாகும் என அறிவித்தார்.

அதன்பிறகு, அவர் அரசியலில் தீவிரம் காட்டி தமிழகத்தின் முதல்வர் ஆனதால் கிழக்கு ஆப்ரிக்காவில் ராஜு படத்தில் அவர் நடிக்கவில்லை.

அந்த படமும் உருவாகவில்லை.

எனவே எம்.ஜி.ஆரின் நண்பரான ஜசரி வேலனின் மகன் ஜசரி கணேஷ், கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு என்ற பெயரில் அனிமேசன்எம்.ஜி.ஆரை வைத்து படத்தை தற்போது உருவாக்கி வருகிறார்.

இப்படத்திற்கு தடை கேட்டு மதுரை உயர்நீதி மன்றத்தில் சக்கரவர்த்தி என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில்… “கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தை தான் தயாரிக்க முடிவு செய்து படத்தின் தலைப்பை பதிவு செய்திருந்தேன். தற்போது அந்தப் படத்தை தயாரிக்கும் ஐசரி கணேஷ், அந்த தலைப்பை என்னிடம் இருந்து வாங்கினார்.

தற்போது அந்த படம் முடிவடைந்து வெளிவர இருக்கிறது. ஆனால் படத்தின் கதை நான் உருவாக்கி வைத்திருந்த கதையல்ல. நான் சொன்ன கதையை படமாக்காமல் வேறு கதையை படமாக்கி இருப்பதால் படத்துக்கு தணிக்கை சான்று வழங்க கூடாது” என்று தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. “இது உயர்நீதிமன்ற விசாரணைக்கு உகந்ததல்ல மனுதாரார் மாவட்ட உரிமையியல் கோர்ட்டில் முறையிட்டு தீர்வு காணலாம்” என்று கூறி மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *