மூட்டு மாற்றுப்பதிய செயல்பாட்டில் தோல்வி என்ற அச்சம் வேண்டாம் – டாக்டர்.மதன் மோகன் ரெட்டி

முழங்கால் வலி மற்றும் கீல்வாதத்தால் அவதியுறும் நோயாளிகளுக்கு நம்பிக்கை ஒளிக்கீற்று
”ஓபுலண்ட் (OPULENT)” – உயர் நெகிழ்திறன் கொண்ட பயோனிக் கோல்டு முழங்கால் மூட்டு அமைப்பு முதல் முறையாக பொருத்தப்பட்டது.

சென்னை, 10 ஜுலை 2018: சென்னை, அப்போலோ மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஒரு முழங்கால் மூட்டு மாற்றுப்பதிய அறுவை சிகிச்சைக்காக முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள உயர் நெகிழ்திறன் கொண்ட பயோனிக் கோல்டு முழங்கால் மூட்டு அமைப்பான ”ஓபுலண்ட்”-ஐ புகழ்பெற்ற முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர்.மதன் மோகன் ரெட்டி பொருத்தியிருக்கிறார்.

தொற்றுகள் மற்றும் சிகிச்சைக்குப் பிறகு முழுதாக குணமடைய ஆகும் நீண்ட கால அளவு ஆகியவை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகளில் இருக்கின்ற பல இடர்பாடுகளுள் சில என்று பல நோயாளிகள் அநேக நேரங்களில் கருதுகின்றனர். ஆனால் இந்த நவீன மேம்பட்ட தொழில்நுட்பத்தின் காரணமாக மூட்டு மாற்றுப்பதிய செயல்பாட்டில் தோல்வி அல்லது வேறுபிற சிக்கல்கள் ஏற்படும் என்ற அச்சத்தை கொண்டிருக்க வேண்டியதில்லை. குந்துவதற்கு, முழங்கால் போடுவதற்கு மற்றும் படிகளில் ஏறுவதற்கான திறன் போன்ற ”அதிக நெகிழ்வுத்தன்மையுள்ள” திறன்களை வழங்குவதால் நோயாளிகள் இதுவரை கற்பனையில் செய்து பார்த்திராத நகர்வுத்திறனை இத்தொழில்நுட்பம் வழங்குகிறது.

பயன்பாட்டுத் திறன் நிரூபிக்கப்பட்டுள்ள கோபால்ட் க்ரோமியம் மாலிப்டினம் (CoCrMo) என்பதே 10 ஆண்டுகளுக்கும் மேல் முழங்கால் மூட்டு மாற்று பதியங்களை உற்பத்தி செய்வதற்கு அதிகம் விரும்பப்பட்ட மூலப்பொருளாக இருந்து வந்திருக்கிறது. இப்போது, ஒரு உறள் பொருளான டைட்டானியம் நயோபியம் நைட்ரேட் (TiNbN) என்பதைக் கொண்டு செயற்கை மாற்றுப் பதியங்களின் மேல் பூச்சு பூசுவதை இந்த சமீபத்திய நவீன தொழில்நுட்பம் சாத்தியமாக்கியிருக்கிறது. CoCrMo-ன் வழக்கமான பண்பியல்புகளுக்கும் கூடுதலாக இவ்வகையினத்தில் மிகச்சிறந்த, நீண்டகாலம் உழைக்கும் திறனையும் மற்றும் உயிரிஇயைவு தன்மையையும் செயற்கை பதியங்களின் மீதுள்ள தங்க நிற பூச்சு வழங்குகிறது.

24.5 Gpa (1.2 மடங்குகள் தோள்பட்டை எலும்பு) என்ற அளவில் இரு மடங்கு வலுவையும் கடின தன்மையையும் கொண்டிருப்பதால் பிற CoCrMo பதியங்களைவிட 40% குறைவாகவே இதில் தேய்மானம் இருக்கும் மற்றும் வழக்கமான பதியங்களைவிட மிக அதிகமாக 20 ஆண்டுகள் வரையும் மற்றும் அதற்கு மேலும் நீடித்து நெடுங்காலம் உழைக்கக் கூடியதாக இது அவைகளை ஆக்குகிறது. TiNbN பூச்சு, சிறப்பான ஒவ்வாமைக்கு எதிரான பண்பியல்புகளை (பூச்சு இல்லாத CoCrMo-களைவிட ஏறக்குறைய 90% குறைவான ஒவ்வாமை) கொண்டிருப்பதால் இந்த செயற்கை மூட்டு பதியங்கள் நிகரில்லாத உடல் ஏற்புத் தன்மையை கொண்டிருக்கின்றன. இதனால் இந்தியாவில் கிடைக்கிற பிற முழங்கால் மூட்டு மாற்றுப் பதியங்களைவிட இவைகள் மிகவும் சிறந்ததாக அதிக பயனுள்ளவையாக இருக்கின்றன. இதன் உயர் நெகிழ்திறன் வடிவமைப்பானது காலுக்கு முழு நெகிழ்வுத் தன்மையை வழங்குகிறது மற்றும் ஆசிய மக்களின் எலும்பு கட்டமைப்புக்கு இது மிகவும் உகந்ததாக இருக்கிறது.

இத்தொழில்நுட்பம் குறித்து பேசிய டாக்டர்.மதன் மோகன் ரெட்டி, ”கடந்த காலம் முழுவதிலும் நோயாளிகளின் சவுகரியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து நான் எப்போதும் தீர்க்கமாக சிந்தித்து வந்திருக்கிறேன். இந்த நோக்கத்தை எட்டுவதற்கு நிலையான புத்தாக்க முயற்சியின் வழியாக நாங்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இதற்கு பங்களிப்பு செய்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று குறிப்பிட்டார்.

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய 1.5 லட்சம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இந்த எண்ணிக்கையானது அடுத்த பத்தாண்டுகளில் 25% அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கைமுறை, உடல்நல பராமரிப்பு மற்றும் உட்கட்டமைப்பில் முன்னேற்றம் மற்றும் வயது முதிர்ச்சியடைந்து வரும் மக்கள் தொகையினர் ஆகியவையே இந்த அதிகரிப்புக்கான காரணிகளாக இருக்கின்றன.

டாக்டர். மதன் மோகன் ரெட்டி குறித்து:-

டாக்டர். மதன் மோகன் ரெட்டி அவர்கள் சென்னை, அப்போலோ மருத்துவமனையில் எலும்பு முறிவியல் துறையில் சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றுவதோடு, நெல்லூர் மற்றும் அரகோண்டாவில் உள்ள அப்போலோ மருத்துவமனைகளிலும் மற்றும் சென்னையில் சன்வே முழங்கால் மூட்டு சிகிச்சை கிளினிக்கிலும் மருத்துவ சேவை வழங்கி வருகிறார். எண்ணற்ற முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்திருக்கும் இவர், முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை, கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில் இவரது சிறப்பான பங்களிப்புக்காக பிரபலமாக அறியப்படும் நிபுணராகவும் திகழ்கிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *