தோனி ரசிகர்களூக்கு ஒரு இன்ப அதிர்ச்சி
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் தோனி. இவருக்கு இந்திய முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் தோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு சுஷாந்த் நடிப்பில் நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளிவந்த MSDhoni The Untold Story ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம், ஆனால், இப்பாகத்திற்கு இயக்குனர் வேறு யாராது இருக்கலாம் என்று தெரிகின்றது.
மேலும், படத்தில் இப்பாகத்தில் ஐபிஎல் குறித்தும், பெங்களூரில் நடந்த முக்கியமான T20 குறித்தும் இப்படம் பேசும் என்று கிசுகிசுக்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி 2015 வேல்ட் கப் குறித்தும் இப்படத்தில் பேசப்படுமாம்.