திலீப் உடன் இணையும் அர்ஜுன்; மலையாளத்தில் அறிமுகமாகிறார்

ஆக்சன் கிங் என்றழைக்கப்படும் நடிகர் அர்ஜுன் சினிமாவுக்கு வந்து கிட்டதட்ட 38 வருடங்கள் ஆகிவிட்டது.

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளிலும் நடித்தாலும் மலையாள சினிமாவில் நேரிடையாக அவர் நடிக்கவில்லை.

தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவான ‘வந்தே மாதரம்’ என்ற படத்தில் மம்முட்டியுடன் இணைந்து நடித்திருந்தார்.

தற்போது ஜாக் டேனியல் என்ற தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார்.

அறிமுக இயக்குனர் எஸ்.எல்.புரம் ஜெயசூர்யா என்பவர் இப்படத்தை இயக்கவுள்ளார்.

இதில் சிறைக்கு சென்று திரும்பிய நடிகர் திலீப் உடன் இணைந்து நடிக்கிறாராம்.

ஆக்சன் கிங் படத்தின் வில்லன் என்பதால் படத்தின் சண்டை காட்சிகளை வடிவமைக்க ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.

இதில் அர்ஜுனுக்கு வில்லன் வேடம் என கூறப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *