கஜா பாதிப்புக்கு அஜித் வழங்கிய 15 லட்சம்; அரசு அறிவித்த பின்னரே தெரிந்தது

கடந்த 9 நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் 7 மாவட்டங்களை கஜா புயல் தாக்கியது.

எனவே அந்த பகுதி மக்கள் துயரத்தில் உள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் நிவாரணங்களை வழங்கி வருகின்றனர்.

தமிழக அரசும் ரூ. 1000 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மத்திய அரசிடம் நிதி கோரியுள்ளது. திமுக கட்சியும் ஒரு கோடி வழங்கியுள்ளது.

லைகா நிறுவனம் ரூ.கோடியே லட்சம் வழங்கியுள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் ஒரு கோடி வழங்கியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் தொகையை நிவாரண நிதியாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

தமிழக நடிகர்களில் ரஜினிகமல்விஜய்சூர்யாகார்த்தி, விக்ரம், விஜய்சேதுபதிசிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நிவாரண நிதிகளை கொடுத்துள்ளனர்.

ஜிவி. பிரகாஷ்விமல் உள்ளிட்டோர் நேரடியாக களத்திற்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்தவர்களின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில் நடிகர் அஜித்குமார் ரூ.15 லட்சத்துக்கான காசோலை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அஜித்குமார் இதுவரை நிதி வழங்கவில்லை. ஒரு அறிக்கையும் விடவில்லை என பலரும் அவரை விமர்சித்தனர்.

தற்போது அரசு அறிவிப்பு வெளியான பின்னரே அனைவருக்கும் தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *