ஜெர்மனியில் ஆளில்லா ஏர் ஆம்புலன்ஸ் பயிற்சியில் நடிகர் அஜித்

விஸ்வாசம் பட சூட்டிங்கை முடித்துவிட்டு அண்மையில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்.

இதனையடுத்து அண்மையில் ஜெர்மனி சென்றுள்ளார்.

அங்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் தக்ஷா மாணவர் குழு தயாரித்துள்ள ஏர்-ஆம்புலன்ஸ் குட்டி விமானத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையில் ஜெர்மனியில் உள்ள பிரபல விமான தயாரிப்பு நிறுவனத்தில் தொழில் நுட்ப பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

பெரிய விமானங்களில் ஒரு என்ஜின் பழுதுபட்டால் தானாக மாற்று என்ஜின் இயங்கும்.

அதுபோல, தக்க்ஷா மாணவர்கள் தயாரிக்கும் ஆளில்லா ஏர் ஆம்புலன்சிலும் கூடுதல் தொழில் நுட்பத்தை சேர்ப்பதற்காக ஜெர்மனியில் உள்ள வெரிகோ நிறுவன அதிகாரிகளின் கருத்தை கேட்டறிந்துள்ளார்.

ஆளில்லா ஏர் ஆம்புலன்ஸ் மூலம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான உறுப்புகளை பாதுகாப்பாக எடுத்து வர இந்த தொழில் நுட்பம் பேருதவியாக இருக்கும் என்கின்றனர் தொழில்நுட்ப மாணவர்கள்.

Leave a Reply

Your email address will not be published.

three × 2 =