கஷ்டப்பட்டு பாடி ரசிகர்களையும் கஷ்டப்படுத்த வேண்டாமே ஜெய்

பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் ஜெய்.

இதனைத் தொடர்ந்து சென்னை 28, சுப்ரமணியபுரம், எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

அண்மையில் இவரது நடிப்பில் பலுன் மற்றும் கலகலப்பு 2 படங்கள் வெளியானது.

இவையிரண்டும் போதிய வரவேற்பை பெறவில்லை.

வருகிற அக்டோபர் 26ல் இவர் நடிப்பில் நடிகர் நிதின் சத்யா தயாரித்துள்ள ஜருகண்டி திரைப்படம் வெளியாகிறது.

பிச்சுமணி இயக்கியுள்ள இப்படத்தில் ரெபா மோனிகா, ரோபோ சங்கர், இளவரசு, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் நடிக்க, போபோ சாசி இசையமைத்துள்ளார்.

இதில் இடம் பெற்றுள்ள செய்யுரத செஞ்சு முடி என்ற பாடலை ஜெய்யே பாடியுள்ளார்.

ஜெய்யின் குரலை நாம் எல்லோரும் கேட்டுள்ளோம். கரகரப்பான குரல் இருக்கும்.

அப்படியிருக்கையில் அவர் ஒரு பாடலை பாடியிருந்தால் எப்படி இருக்கும்? என நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.

அந்த பாடலை மிகவும் கஷ்டப்பட்டு பாடியிருப்பது நல்லாவே தெரிகிறது. அவரும் கஷ்டப்பட்டு பாடி அந்த பாடலை கேட்கும் ரசிகர்களையும் கஷ்டப்படுத்த வேண்டுமா? என்பதுதான் தெரியவில்லை.

ஜெய் சார்.. இனிமேலாவது பாடாமல் இருப்பீர்களா..?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *