கஜா புயலுக்கு வசூலான தொகையை அரசு வெளியிட சிம்பு யோசனை

நாகை, வேதாரண்யம், கோடியக்கரை, தஞ்சை, திருவாரூர்,  புதுக்கோட்டை, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகள் கஜா புயலால்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

லட்சக்கணக்கான மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. மின்சாரம் கம்பிகள் அறுந்துள்ளன. 46 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

பலரும் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.

எனவே மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப பிரபலங்கள் பலரும் நிவாரண நிதியை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் சிம்பு ஒரு வீடியோ டெல்டா மக்களுக்கு உதவ ஒரு யோசனை தெரிவித்துள்ளார். அதில் செல்போன் நெட்வொர்க் மூலமாக உதவ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது…

கஜா புயல் தாக்கியதில் டெல்டா பகுதி மக்கள் தவித்து வருகின்றனர்.

நிவாரண நிதியை பலரும் கொடுக்கின்றனர். ஆனால் அந்த தொகை சரியாக மக்களிடம் சென்று சேர்கிறதா? என்பதை கவனிக்க வேண்டும்.

ஒரு சாமானியன் பத்து ரூபாயைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், என்ன செய்வார்? இதற்கு ஒரு வழி இருக்கிறது. நாம் அனைவரும் செல்போன் உபயோகம் செய்கிறோம். காலர் டியூன் பயன்படுத்துகிறோம்.

அந்த பயன்பாட்ற்கு பணம் கொடுக்கிறோம்.

செல்போன் நெட் ஒர்க் மூலமாக அனைவரும் பணம் செலுத்த வாய்ப்பு இருக்கிறது. இதற்கு அனைத்து நெட்வொர்க்கும் இணைந்து செயல்பட வேண்டும்.

யார் எவ்வளவு பணம் கொடுத்திருக்கிறார்கள் என்கிற மொத்த பட்டியலையும் அரசாங்கம் வெளியிட வேண்டும். நாம் அனைவரும் இதற்காக கரம் கோர்க்க முடியும்.

இது சாத்தியம் என நினைத்து செயல்பட விரும்பினால், #UniteForHumanity, #UniteForDelta  என்ற ஹேஷ்டேக்கில் இதைக் கொண்டு சேருங்கள். இறைவன் இருக்கிறான். நல்லதுதான் நடக்கும்.” என சிம்பு அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *