செல்போன் தட்டிவிட்டதற்கு மன்னிப்பு கேட்ட நடிகர் சிவகுமார்

செல்போன் தட்டிவிட்ட பிரச்னை. சிவகுமார் அவர்கள் வருத்தம்.

நேற்றைய தினம் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பங்கேற்க வந்தார் நடிகர் சிவகுமார். அப்போது கூட்டத்தில் செல்பி எடுக்க முயற்சித்த நபரின் கைப்பேசியைத் தட்டிவிட்டார் சிவகுமார். இந்த வீடியோ காட்சி வைரலாக பரவியதையடுத்து, சிவகுமார் அதற்கான விளக்கமும் அளித்தார். இருந்தும், பலதரப்பட்ட மக்களிடமிருந்து அதற்கு எதிர்ப்பு வந்த நிலையில், தான் நடந்து கொண்ட செயலுக்கு வருத்தம் தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவு செய்து அனுப்பியுள்ளார். அதன் விபரம் வருமாறு:-

ஆர்வம் மிக்க ரசிகர்கள் கட்டுக்கடங்காத கூட்டத்தில் அப்படித்தான் உணர்ச்சிவசப்பட்டு நடந்து கொள்வார்கள். பிரபல கலைஞன் அவற்றையெல்லாம் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.

எதுவாயிருப்பினும் சிவகுமார் செல்போனைத் தட்டிவிட்டது தவறு தான் என்று பெருவாரியான மக்கள் நினைக்கும் பட்சத்தில், நான் உளமாற என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *