மரணமடைந்த ரசிகரின் குடும்பத்தை சந்தித்து படிப்புச் செலவை ஏற்ற சூர்யா
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் மணிகண்டன். 35 வயதான இவர் நடிகர் சூர்யாவின் நற்பணி மன்றத்தின் தலைவராகஇருந்து வருகிறார்.
இவர் கடந்த 13-ந் தேதி நுரையீரல் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
இதனையறிந்த நடிகர் சூர்யா அவரின் குடும்பத்தாரை சந்திக்க இரவு 10 மணிக்கு யாருக்கும் தெரியாமல் சேலம் சென்றுள்ளார்.
ரசிகரின் மனைவி மற்றும் மகளை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் இந்த குடும்பத்திற்கு நான் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்களின் குடும்ப செலவையும் ஏற்றுக் கொண்டு அவரின் மகளின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்து திரும்பியிருக்கிறாராம்.