காக்கும் முன்னேற்ற கழகம் கட்சி சார்பாக எம்எல்ஏ ஆகிறார் சூர்யா

மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து படத்தில் மாணவர் தலைவராக சூர்யா நடித்திருந்தார்.

அப்போதே இப்படம் பரபரப்பாக பேசப்பட்டது.

தற்போது முழுநேர அரசியல்வாதியாக சூர்யா நடித்து வரும் படம் என் ஜி கே.

செல்வராகவன் இயக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

நந்த கோபால குமரன் என்பது சுருக்கமே என் ஜி கே என கூறப்படுகிறது.

இந்நிலையில் என்.ஜி.குமரன் என்ற பெயருடன் எம் எல் ஏ என்ற பதவியும் இணைந்துள்ளது.

அதாவது படத்தின் கதைப்படி என்.ஜி.குமரன் ஆகிய இவர் எம்.எல்.ஏ.,வாக நடித்துள்ளாராம்.

மேலும் காக்கும் முன்னேற்ற கழகம் என்கிற கட்சியின் இளைஞர் அணி தலைவராகவும் இதில் சூர்யா பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *