70 லட்சத்தை கேரளாவுக்கு நிவாரண நிதியாக கொடுத்த விஜய்

100 ஆண்டுகளில் இல்லாத ஒரு கடும் வெள்ள சேதத்தை கேரளா மாநிலம் சந்தித்தது.

இது மிகப்பெரிய பேரிழப்பு என மத்திய அரசு அறிவித்தும்விட்டது.

இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதனையறிந்த சிறிய மாநிலங்கள் முதல் பெரிய நாடுகள் வரை தங்களால் இயன்ற நிவாரணத் தொகையினை கேரள அரசுக்கு கொடுத்து உதவி வருகின்றனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி நடிகர்களும் நிவாரண நிதிகளை கேரள முதல்வருக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் கிட்டதட்ட ரூ.70 லட்சம் அளவில் கேரள மக்களுக்கு நேரிடையாக நிதியுதவி அளித்துள்ளார்.

கேரளாவில் உள்ள தன்னுடைய அனைத்து மாவட்ட மக்கள் இயக்க ரசிகர்களுக்கும் 3 லட்சம் அனுப்பியுள்ளார். (14 மாவட்டம். ஒவ்வொருமாவட்டத்திற்கும் 3 லட்சம் )

முகாமில் தஞ்சமடைத்தவர்களுக்கும் மற்றும் பிற பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வாங்குவதற்கு பணம் கொடுத்துள்ளார்.

மேலும் இந்த நிவாரண பொருட்கள் தமிழ்நாட்டில் 15 மாவட்டத்திலிருந்து 15 லாரிகள் மூலமாக பாதிக்கப்பட்ட 12 மாவட்டத்திற்கு வழங்கப்படுகிறது.

இன்று இரவு இந்த லாரிகள் அனைத்தும் கேரளாவில் உள்ள எர்ணாகுளம், ஆலப்புழா, பத்தானம்திட்டா, பாலக்காடு மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று அரிசி, பருப்பு, சர்க்கரை ,கோதுமைமாவு, ரவை, மைதா, ஆடைகள், போர்வைகள், பெட் சீட், பால் பௌடர், நாப்கின்கள் மற்றும் மருந்து பொருட்கள் ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்படுகிறது.

மலையாள நடிகர்களுக்கு இணையாக விஜய்க்கும் கேரளாவில் மலையாள ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published.

4 × one =