விஷால் வந்தார்; கூடவே வரலட்சுமியும் வந்துட்டாரு…
சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால் மட்டுமே சிலர் டிவி.க்கு வருவார்கள்.
ஆனால் சினிமாவில் பிஸியாக இருக்கும்போதே பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன்.
இவரைத் தொடர்ந்து விஷால் ‘நாம் இருவர்’ என்ற சன் டிவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்துவிட்டார்.
தற்போது வரலட்சுமியும் ‘உன்னை அறிந்தால்’ என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து ஜெயா டிவியில் வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சி அடுத்த வாரம் 14ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
இவர்களைப் போல் நடிகர் பிரசன்னா, ‘சொப்பன சுந்தரி’ என்ற நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ஆகிவிட்டார். இது சன் லைப் டிவியில் ஒளிப்பரப்பாகிறது.