மனைவி ரஜினியை விவாகரத்து செய்த நடிகர் விஷ்ணு விஷால்

வெண்ணிலா கபடி குழு படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவானவர் நடிகர் விஷ்ணு விஷால்.

அதனையடுத்து முண்டாசுப்பட்டி, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவரானார்.

அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

விரைவில் இவர் நடித்துள்ள சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் திரைக்கு வரவுள்ளது.

இதனையடுத்து முண்டாசுப்பட்டி2 படத்தில் நடிக்கவுள்ளார்.

இவருக்கும், நடிகர் நட்ராஜின் மகள் ரஜினி என்பவருக்கும், கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்நிலையில் தன் மனைவி ரஜினியுடன் கருத்து வேறுபாடு காரணமா தற்போது இவர்கள் விவாகரத்து பெற்றுள்ளனர்.

இதுகுறித்து விஷ்ணு டுவிட்டரில் கூறியிருப்பதாவது : நானும், ரஜினியும் ஓர் ஆண்டாக பிரிந்து வாழ்ந்து வந்தோம். தற்போது எங்களுக்கு விவாகரத்து கிடைத்துள்ளது.

எங்களது மகனுக்கு ஒரு நல்ல பெற்றோராக இருந்து, அவனுக்கு எல்லாவற்றையும் செய்தோம், இனியும் செய்வோம். பல ஆண்டுகள் நாங்கள் மகிழ்ச்சியாக இருந்தோம், இனி நல்ல நண்பர்களாக இருப்போம்.

எங்களது மகன் மற்றும் இருவரது குடும்பங்களின் நலன் கருதி எங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மரியாதை அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *