சாஹோ-வை அடுத்து மீண்டும் அனுஷ்காவுடன் இணையும் பிரபாஸ்
ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் பிரபாஸ் – அனுஷ்கா இருவரும் இணைந்து நடித்தனர்.
எனவே இவர்கள் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என தகவல்கள் வெளியானது.
ஆனால் அப்படியொன்றும் இதுவரை நடக்கவில்லை.
இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகும் `சாஹோ’ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ்.
இந்தப் படத்தை முடித்துவிட்டு ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார்.
இந்தப் படத்தில்தான் அனுஷ்கா இணைய இருக்கிறாராம்.
மற்றொரு நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறாராம்.
இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளில் உருவாகிறது.
இது பிரபாஸ் நடிக்கும் 20-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.