தமிழில் 25 படங்களை முடித்து விட்டு தெலுங்கு & மலையாளத்தில் அறிமுகமாகும் விஜய்சேதுபதி

சினிமாவில் நடிக்கத் தொடங்கிய குறுகிய காலத்தில் 25 படங்களில் நடித்து முடித்து விட்டார் விஜய்சேதுபதி.
அவரது 25வது படமான சீதக்காதி ஓரிரு தினங்களுக்கு முன் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
தற்போது, முதல்முறையாக தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார்.
‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், சீரஞ்சிவி, அமிதாப் பச்சன், சுதீப், நயன்தாரா ஆகியோருடன் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்.
இந்நிலையில், தெலுங்கைத் தொடர்ந்து மலையாளத்திலும் அறிமுகமாகவுள்ளார்.
சனில் இயக்கத்தில் ஜெயராம் நாயகனாக நடிக்கும் ‘Marconi Mathai’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில்  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விஜய் சேதுபதி.

Leave a Reply

Your email address will not be published.

three + 19 =