அஜித்-வினோத் கூட்டணியில் இணையும் ஏஆர். ரஹ்மான்-நஸ்ரியா
சிவா இயக்கி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் அஜித்.
இப்படம் 2019 பொங்கலுக்கு வெளியாகும் என இதன் செகன்ட் லுக்கில் அண்மையில் அறிவித்தனர்.
இதனையடுத்து சில நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு 2019 பிப்ரவரியில் தன் அடுத்த படத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிப்பார் எனவும் நடிகை நஸ்ரியா பகத்பாசில் இதில் நாயகியாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.
இப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் எச்.வினோத் இயக்க, ரஹ்மான் இசையமைக்கிறாராம்.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் நடித்த வரலாறு படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.