நரகாசூரன் ரிலீஸ் ஆகல; லைகாவுடன் இணையும் அரவிந்த்சாமி & கார்த்திக் நரேன்

’துருவங்கள் 16’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் என்ற படத்தில்  நடித்தார் அரவிந்த்சாமி.
சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
கெளதம் மேனன் முதலில் இப்படத்தை தயாரித்தார். அதன் பின்னர் பல பிரச்சினைகள் ஏற்பட  வெளியீட்டு சிக்கல் தொடர்கிறது.
பலமுறை வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டும் படம் வெளியாகவில்லை.
இந்நிலையில், தற்போது மீண்டும் அரவிந்த்சாமி – கார்த்திக் நரேன் கூட்டணி இணைகிறதாம்.
இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
’நரகாசூரன்’ பட சூட்டிங்கின் போதே  ‘நாடகமேடை’ என்னும் படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தார் கார்த்திக் நரேன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *