அஜித்தின் 2 படங்களையும் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார்

அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் அடுத்த 2019 பொங்கலுக்கு வருகிறது.

இதனையடுத்து அஜித் நடிக்கவுள்ள இரண்டு படங்களின் தகவலும் அதன் ரிலீஸ் தேதியும் வெளியாகியுள்ளது.

அஜித்தின் 59 மற்றும் 60 ஆகிய இரண்டு படங்களையும் வினோத் இயக்கவுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த இரண்டு படங்களையும் மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

இதில் அஜித் 59 படம் அமிதாப் நடித்த பிங்க் படத்தின் ரீமேக்காக உருவாக உள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். முக்கிய கேரக்டர் ஒன்றில் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்துடன் நடிக்கிறார்.

தல 59 படத்தை 2019ல் ஆண்டில் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதி வெளியிட உள்ளனர்.

இதனையடுத்து தல 60 படத்தை 2019 ஜீலையில் தொடங்கி 2020 ஆம் ஆண்டில் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *