ஸ்ரீதேவி கணவர் தயாரிப்பில் அஜித்தை இயக்கும் வினோத் !
சிவா இயக்கத்தில் நயன்தாராவுடன் ‘விஸ்வாசம்’ படத்திற்காக டூயட் பாடி வருகிறார் அஜித்.
இப்படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் படம் என்ன? என்பதே இப்போது ஹாட் டாப்பிக்.
இந்நிலையில் அஜித்தை இயக்கப் போவது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குனர் வினோத் தான் என கூறப்படுகின்றது.
இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்க இருக்கிறாராம்.
இந்த புதிய கூட்டணிக்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்க வாய்ப்புள்ளதாக தகவல் வருகிறது.
ஆனால் விஸ்வாசம் முடிந்த பின்னரே அடுத்த பட பேச்சு என பிடிவாதமாக இருக்கிறாராம் தல.