அஜித்-விஷாலை அடுத்து சிவகார்த்திகேயனுடன் இணையும் அர்ஜூன்

பல படங்களில் தனி ஹீரோவாக நடித்தாலும் அஜித்துடன் மங்காத்தா, விஷாலுடன் இரும்புத்திரை ஆகிய படங்களில் நடித்து நம்மை வியக்க வைத்தவர் ஆக்சன் கிங் அர்ஜூன்.
தற்போது சிவகார்த்திகேயன் உடன் இணையவுள்ளார். அந்த செய்தியை பார்ப்போம்.
சீமராஜா படத்தை அடுத்து  ராஜேஷ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இதனை முடித்து விட்டு ரவிக்குமார் இயக்கவுள்ள படத்தில் நடிக்கிறார் சிவா.
இதன் பின்னர் விஷால் நடித்த  இரும்புத்திரை பட இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்திலும் நடிகர் அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ள இப்படத்திற்கு எடிட்டராக ரூபன், ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் வில்லியம்ஸ் பணியாற்ற உள்ளனர்.
சிவகார்த்திகேயனின் ஆஸ்தான நிறுவனமான  24 AM Studios தயாரிப்பில்  இப்படம் உருவாக உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *