விஸ்வாசத்துக்கு வழிவிட்டு மரண மாஸ் காட்ட போகும் பேட்ட
அடுத்த வருடம் 2019 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ & அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ ஆகிய படங்கள் மோத உள்ளன.
இரண்டு பட தயாரிப்பு நிறுவனங்களும் இதை உறுதிப்படுத்தி உள்ளன.
பொங்கல் பண்டிகை ஜனவரி 15 செவ்வாய் கிழமை வருகிறது.
எனவே அதற்கு முந்தைய வாரத்தில் அஜித்தின் வியாழன் சென்டிமெண்ட் படி ஜனவரி 10ஆம் தேதி விஸ்வாசம் திரைக்கு வருகிறது.
அதற்கு அடுத்த நாள் 11ஆம் தேதி வெள்ளியன்று ரஜினியின் பேட்ட திரைக்கு வருகிறது.
இன்றோ நாளையோ பேட்ட படம் சென்சார் செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

