விஸ்வாசம் டீசர் ரிலீஸ்..; வி சென்டிமெண்ட்டை உடைத்த அஜித்
அஜித் பட பர்ஸ்ட் லுக் ஆகட்டும், டீசர் ஆகட்டும் எதுவாக இருந்தாலும் ஏன் படத்தின் ரிலீஸ் தேதியே ஆனாலும் வியாழக்கிழமைகளில் வெளியிட்டு வருவது வழக்கம்.
அது மட்டுமில்லாமல் வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அனைத்தையும் வி எழுத்தில் தொடங்குவது போல அமைத்துக் கொண்டார் அஜித்.
டைரக்டர் சிவாவும் பாபா பக்தர் என்பதால் இந்த சென்டிமெண்ட் தொடர்ந்தது.
ஆனால் அண்மைக்காலமாக அந்த சென்டிமெண்ட்டில் இருந்து அஜித் வெளியே வந்துள்ளார் எனத் தெரிகிறது.
விஸ்வாசம் சிங்கிள் ட்ராக் முதல் அனைத்து பாடல்களையும் வியாழக்கிழமை அல்லாத நாட்களில் வெளியிட்டனர்.
தற்போது விஸ்வாசம் பட டீசரை வருகிற கிறிஸ்மஸ் தினத்தில் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
டிசம்பர் 25 கிறிஸ்மஸ் தினம் செவ்வாய்கிழமை வருகிறது.
சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.
அடுத்து வருடம் 2019 பொங்கலுக்கு விஸ்வாசம் வெளியாகவுள்ளது.