ஓநாயும் மனிதனையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படம் “ஆல்ஃபா”

ALPHA (ஆல்ஃபா)

வெளியீடு: August 24 th
நிறுவனம்: Sony Pictures

ஓநாய் மனிதனைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஓநாய் மனிதனையே மையமாக வைத்து
உருவாக்கப்பட்ட மனிதனும் ஓநாயும் நட்பு பாராட்டி, ஒருங்கிணைந்து செயல்பட்டு, எதிர்கொண்ட இன்னல்களையும் பேரபாயங்களையும் சந்தித்துச் சமாளித்து ஓர் இனத்தை நோக்கிப் பயணிப்பதுதான் ஆல்ஃபா என்கிற இப்படத்தின் கதைக்களம்.

சுமார் 20000 ஆண்டுகளுக்கு முன்னர், ஐரோப்பாவில் குறிப்பிட்ட ஒரு பகுதியில் வாழ்ந்து வரும்
பழங்குடி இனத்தவர் வேட்டையாடுவதில் வல்லவர்கள்! காட்டெருமைகளை வேட்டையாடுவதில்
கைதேர்ந்தவர்கள்!

ஒருமுறை, வேட்டைக்குப் புறப்பட்டுச் செல்கிறது அவ்வினத்திலிருந்து ஒரு குழு. முதன்முறையாக
இளைஞன் ஒருவனும் அவர்களோடு பயணிக்கிறான். எதிர்பாராத திருப்பங்கள் சிலவற்றால்,
அவன் காயப்பட்டு மயக்கமுறுகிறான்.

அவன் இறந்துவிட்டதாகக் கருதி, இதர வேட்டைக்காரர்கள், தம் பயணத்தைத் தொடர்கின்றனர். விழித்தெழும் அவன், நடந்து முடிந்துவிட்ட விபரீதத்தை எண்ணி அதிர்ச்சிக்குள்ளாகிறான்! தனிமையில் வாடுகிறான்! தனது அணியிலிருந்து பிரிந்து தனிமைப்படுத்தப்பட்ட ஓர் ஓநாயும் அதே மனநிலையில்தான்
பயணிக்கிறது!

தனித்தனியாகத் தனிமையில் வாடும் அவ்விருவரும் சந்தித்து, இணைந்து தத்தம் இலக்கு நோக்கிப்
பயணிக்கத் தொடங்குகிறார்கள். தடைக்கற்களையே படிக்கற்களாகப் பாவித்து, எதிர்வரும்
ஆபத்துகளையும் கடந்து, பயணத்தைத் தொடர்கிறார்கள்.

அம்மனிதன், குளிர்காலம் தொடங்கும் முன் ஊர் சென்று விடவேண்டும். அவ்வோநாய்,
குளிர்காலம் வருவதற்கு முன் அப்பகுதியைக் கடந்து சென்று, தன் இனத்தவரோடு இணைந்தாக
வேண்டும்! இருவருக்கும், துணிவே துணை!

96 நிமிடங்கள் ஓட்ட நேரம் கொண்ட இப்படத்தில் கோடி ஸ்மிட் – மெக்பீ(Kodi Smit- McPhee),
லியானோர் வரேலா, ஜென்ஸ் ஹல்டன் மற்றும் ஜோஹனஸ் ஹெளகுர் ஜோஹனசன் ஆகியோர்
நடித்துள்ளனர்.

ஜோசப் எஸ். டிபீலி இசையமைக்க Martin Gschlacht ஒளிப்பதிவு செய்துள்ளார்.

எழுதி இயக்கியுள்ளதோடு தயாரிப்பிலும் பங்கு பெற்றுள்ளார் ஆல்பர்ட் ஹுஸ் (Albert Hughes).

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *