வழக்கு நிரூபிக்கப்பட்டால் உண்மை முகம் தெரியும்.; #MeToo பற்றி அனிருத்
அயல்நாடுகளில் தொடங்கப்பட்ட மீ டூ இயக்கம் இந்தியாவிலும் தற்போது பிரபலமாகியுள்ளது.
அதுவும் சினிமா & அரசியல் உலகில் பல பாலியல் புகார்கள் எழுந்துள்ளன.
திரையுலகில் வைரமுத்து, ஜான் விஜய், சுசி கணேசன், அர்ஜூன், தியாகராஜன் உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிபட்டன.
இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத் மீ டூ மூலம் பெண்கள் பாலியல் புகார்கள் கூறுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது… “மீ டூ இயக்கம் நல்ல விஷயம். பாதிக்கப்பட்ட பெண்கள் ஓபனாக சொல்கிறார்கள்.
சிலர் வழக்கு போட்டுள்ளனர். வழக்கு நிரூபிக்கப்பட்டால் உண்மை முகம் தெரிந்து விடும்” என தெரிவித்துள்ளார்.