ஏஆர். ரஹ்மான் இசையில் ஷாரூக்கானுடன் இணைந்தார் நயன்தாரா

AR Rahman Shahrukh Khan and Nayanthara in Jai Hind Promo video ft

இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

இந்நிலையில் 2018ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளன.

இந்த ஹாக்கி போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக ஜெய்ஹிந்த் இந்தியா என்ற ஆல்பத்தை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

இதற்கான புரொமோ வீடியோ ஒன்றையும் உருவாக்கி வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ஷாரூக்கான், நயன்தாரா ஆகியோரும் உள்ளனர்.

இவர்களுடன் ஏ.ஆர்.ரஹ்மான், டிரம்மர் சிவமணி, ஸ்வேதா மோகன் மற்றும் ஹாக்கி அணி வீரர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *