2.0 பட 6வது ரிலீல் அசந்து போன ஆஸ்கர் நாயகன் ரஹ்மான்!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘2.0’.
இம்மாதம் 29-ஆம் தேதி இப்படத்தை லைகா நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது.
 இப்படத்தின் 3D டிரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி வெளியானது
இந்நிலையில் இப்பட இசை அமைப்பாளர்  ஏ.ஆர்.ரஹ்மான், ‘2.0’வின் ஆறாவது ரீல் காட்சிகளுக்கான மிக்சிங் வேலைகளை செய்து வருகிறார்.
அது குறித்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்வீட்டில் Mixing reel 6 #2point0 OMG ,.emotional and sci-fi Epic ! என்று குறிப்பிட்டுள்ளார்.
பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மான் தான் பணியாற்றும் படங்களின் பாடல், டிரைலர் வெளியிட்டு தேதி போன்றவற்றை ட்வீட் செய்வது வழக்கம்!
ஆனால் தற்போது  ‘2.0’ பட காட்சிகள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *