நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியுடன் இணையும் அருண் விஜய்
மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அறிமுகமானவர் நவீன்.
அப் படத்துக்குப் பிறகு ‘கொளஞ்சி’ என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து, ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்ற படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதில், நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன்.
ஆக்ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார். ‘அர்ஜுன் ரெட்டி’ ஷாலினி பாண்டே ஹீரோயினாக நடிக்கிறார்.
இந்நிலையில், இந்தப் படத்தில் அருண் விஜய்யும் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.