மீண்டும் சின்ன வீடு! 2ம் பாகம் எடுக்க பாக்யராஜ் திட்டம்!

மீண்டும் சின்ன வீடு.; பார்ட் 2 எடுக்க பாக்யராஜ் பக்கா ப்ளான்

‘முந்தானை முடிச்சு’, ‘தாவணி கனவுகள்’, ‘இன்று போய் நாளை வா’, ‘வீட்ல விசேஷங்க’, ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’, சின்ன வீடு’, ‘மெளன கீதங்கள்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் கே.பாக்யராஜ்.

ஆனால் தற்போது படங்களை இயக்காமல் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் படம் இயக்க ஆயுத்தமாகி வருகிறார் கே.பாக்யராஜ்.

அவரது இயக்கத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘சின்ன வீடு’ படத்தின் 2-ம் பாகத்தை இயக்கவுள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறாராம்.

இதர கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

எனவே சின்ன வீடு 2 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

 

Leave a Reply

Your email address will not be published.

nineteen + 5 =