நல்ல கதையா திருடுங்கடா என சர்கார் டீமுக்கு பாஜக ராஜா அட்வைஸ்

விஜய் படங்கள் என்றால எதிர்ப்பு இல்லாமல் வெளியாகாது போல. அப்படியே வெளியானாலும் அதில் உள்ள காட்சிகளை வைத்து எதிர்ப்பு தெரிவிப்பது தற்போது வாடிக்கையாகி விட்டது.

தலைவா படம் முதல் இது போன்ற பிரச்சினைகளை விஜய் அடிக்கடி சந்திக்கிறார்.

மெர்சல் படத்தில் டிஜிட்டல் இந்தியா முதல் ஜிஎஸ்டி வரி உட்பட பல காட்சிகளை வைத்திருந்த காரணத்தால் பாஜக. தலைவர்களின் எதிர்ப்புக்கு அந்த படம் உள்ளானது.

தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் எச். ராஜா ஆகிய இருவரும் இப்படத்தை கடுமையாக எதிர்த்தனர்.

இதை தொடர்ந்து நேற்று வெளியான சர்கார் படத்தையும் எதிர்த்து வருகின்றனர்.

வருண் என்பவரின் செங்கோல் கதையை திருடிதான் சர்கார் படத்தை படமாக்கி விட்டார் என தகவல்கள் பரவ. பின்னர் அந்த நபருடன் சமரசம் செய்துக் கொண்டார் முருகதாஸ்.

கள்ள கதையை வைத்து கள்ள ஓட்டை பற்றி படமெடுத்துள்ளனர் என விமர்சித்து இருந்தார் தமிழிசை.

இந்நிலையில் இன்று சர்கார் படத்தை தாக்கும் வகையில் தன் ட்விட்டர் பக்கத்தில் எச். ராஜா ஒரு பதிவை போட்டுள்ளார். அதில்

H Raja‏Verified account @HRajaBJP

படித்ததில் பிடித்தது. கதையை திருடுறதுன்னு முடிவு பண்ணிட்டா நல்ல கதையா திருடுங்கடா… என பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *