முக்கிய செய்திகள்

நாட்டில் புதிதாக 13 எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் தொடங்கப்படும்.

70 மருத்துவக்கல்லூரிகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளாக மாற்றப்படும்.

நாட்டில் 20 புற்றுநோய் ஆராய்ச்சி மையங்களும் தொடங்கப்படும். – மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா.

நிர்மலா தேவி விவகாரம் குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்.

கடந்த ஓராண்டில் ஆளுநர் மாளிகைக்கு நிர்மலா தேவி வந்ததே இல்லை- ஆளுநர் மாளிகை.

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை இணைத்து பேசுவதற்கு ஆளுநர் மாளிகை கடும் கண்டனம்.

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்குத் தொடர்பு இல்லை, நக்கீரன் இதழில் செய்திக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு.

நிர்மலா தேவி ஆளுநர் மாளிகைக்கு வந்ததே இல்லை- ஆளுநர் மாளிகை விளக்கம்

ரூ.3,000 கோடியில் வல்லபாய் பட்டேலுக்கு 182 அடியில் சிலை… அக்.,31ல் சிலை திறந்து வைப்பு…

புதிய தலைமைச் செயலக கட்டட விவகாரத்தில் குற்றவியல் விசாரணைக்கு பரிந்துரைத்த தனி நீதிபதி சுப்பிரமணியம் உத்தரவுக்கு உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு தடை

நாடாளுமன்ற தேர்தலும், தமிழக சட்டமன்றத் தேர்தலும் ஒரே நேரத்தில் நடக்க வாய்ப்பு இல்லை- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்.

தமிழக அரசின் பதவிகாலம் 2021 வரை உள்ளது.

தமிழகத்தில் இடைத்தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதற்கு யாருடைய நிர்பந்தமும் காரணமில்லை.

திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பான வழக்கு முடிந்தால்தான் தொகுதி காலியாக உள்ளதாக அறிவிக்க முடியும்.

வழக்கு 23-ம் தேதி நிறைவடைந்தால் ஜனவரி மாதத்திற்குள் இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தி முடிக்கப்படும்.

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்த மனு நிலுவையில் உள்ளதால் அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது – இந்திய தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *