முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள நிவேடா மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் டிரம்ப், எல்க்கோ நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளுக்கு ரஷியா கட்டுப்படவில்லை. அவர்கள் பல ஆண்டுகளாக மீறி வந்துள்ளனர். இதுதொடர்பாக, முன்னாள் அதிபர் ஒபாமா ஏன் பேச்சுவார்த்தை நடத்தி வெளியேறவில்லை என்பது எனக்கு தெரியவில்லை. எங்களுக்கு அனுமதி இல்லாத ஆயுதங்களை அவர்கள் தயாரிப்பதை இனியும் அனுமதிக்க முடியாது. எனவே, அந்த அணு ஆயுத ஒப்பந்தத்தை நாங்கள் ரத்து செய்யப் போகிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

பிரான்சின் பாரிஸ் நகரில் உள்ள பள்ளி ஒன்றில், மாணவன் ஒருவன் துப்பாக்கி முனையில் ஆசிரியை-ஐ மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் மூளைச் சாவு அடைந்த சிறுமி இயந்திரங்களின் உதவியுடன் உயிர் வாழ்ந்து வந்த நிலையில், தற்போது அவர் இயற்கையாக மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பாடகி சின்மயியை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் சந்தித்து விரிவான ஆலோசனை செய்துள்ளனர். சின்மயிக்கு நடந்த கொடுமையை சட்டரீதியாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்து அவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. எனவே இந்த விவகாரம் இன்னும் சில நாட்களில் விஸ்வரூபம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

பெரம்பலூரில் தாய் மதுகுடிக்க பணம் தராததால் மனமுடைந்த மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சபரிமலை விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனின் கருத்தை கிண்டலடிக்கும் விதமாக எஸ்.வி சேகர் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்

தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது: ஐதீகம் என்பது வேறு அடக்குமுறை என்பது வேறு. அன்றிருந்தது அடக்குமுறை. ஐதீகம் அல்ல…நாத்திகவாதிகள் ஐதீகத்தை கேள்வி கேட்பது ஏன்? முத்தலாக்? மசூதிக்குள் பெண்கள் நுழைய தடை? பற்றி ஏன் பேச மறுப்பு ஏன்? கன்னியாஸ்திரிகள் மானபங்கப்பட்டதை கண்டிக்க மனம் இல்லை ஏன்? அதெல்லாம் பெண்ணுரிமை இல்லையா? என்று கூறியுள்ளார்

சோலார் பேனல் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சரிதா அளித்த பாலியல் புகாரில் கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையிலிருக்கும் செய்தியாளர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என கேரள போலீஸ் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மதிக்காத செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற உளவுத்தகவலும் வெளிவந்துள்ளதால் செய்தியாளர்கள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாலிவுட்டின் நட்சத்திர காதல் ஜோடிகளான தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமணம் நவம்பரில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேற்கு வங்கத்தில் நபர் ஒருவர் மீதான தனிப்பட்ட பகையில், அவரது மனைவியை காமுகர்கள் சிலர் கொடூரமாக கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சர்வதேச அளவில் கடுமையான கண்டனங்களை பெற்ற மாயமான பத்திரிகையாளர் ஜமால் கசோஜி கொலைக்கு பின்னணியில் மோசமான கூலிப்படை உள்ளதாக செளதி அரேபியா தெரிவித்துள்ளது

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மனைவி, கப்பலில் ஆபத்தான முறையில் செல்பி எடுத்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது

ஆண்கள் ராணுவத்தில் சேரவும், தேர்தலில் வாக்களிக்கவும் வயது 18 என்ற நிலை இருக்கும் போது, ஆண்களின் திருமண வயது மட்டும் 21ஆக உள்ளது, அதுவும் ஏன் 18 ஆக் இருக்க கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்தபோது இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ஆனால் அதே நேரத்தில் 18 வயது ஆண் ஒருவர் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று கோரி வழக்கு தொடர்ந்தால் அதனை விசாரிக்க தயாராக இருப்பதாக சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்

சென்னையில் டெங்கு பாதிப்பால் 2 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஹைகோர்ட்டையும், காவல் துறையையும் தரக்குறைவாக பேசியது தவறு தான் என ஹெச்.ராஜா நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுள்ளார்

டெல்லி: பலாத்கார வழக்கில் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக சாட்சியம் கூறிய பாதிரியார் குரியகோஸ் கட்டுதரா மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்

சபரிமலை: கோர்ட் தீர்ப்பு வந்து இதுநாள்வரை ஒருநாள் கூட பெண்கள் கோயிலுக்குள் காலடி வைக்காத நிலையில் சபரிமலை நடை இன்று மூடப்படுகிறது

பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வக்கீல்களுடன் இருக்கைக்காக வாக்குவாதமும் செய்தது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது

சென்னையில் பரபரப்பு நிலவி வருகிறது. முதலில் டெங்கு காய்ச்சல் என்பது சாதாரண வைரஸ் காய்ச்சல் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு முறையான தடுப்பு முறைகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் பெற்றாலே உயிரிழக்கும் அபாயத்தை தடுத்து விடலாம்

கொசு, புழுக்களை ஒழிக்க கடும் நடவடிக்கை: சுகாதார துறை செயலர்

ரூபாயின் மதிப்பு உயர்வு : ரூ.73.24

டெண்டர் வழக்கு: சி.பி.ஐ., விசாரணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என விதிக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பரிசீலனை செய்யுமாறு தொடரப்பட்ட சீராய்வு மனு மீதான தீர்ப்பை கோர்ட் நாளை அறிவிக்கிறது.

முதல்வர் பழனிசாமி மீதான சி.பி.ஐ., விசாரணைக்கு எதிராக தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *